Madhavan, Mahesh Babu, AK 
வெள்ளித்திரை

12 ஹீரோக்கள் நிராகரித்த படம்… 100 கோடி வசூல் செய்து சாதனை!

பாரதி

நமக்கு இன்றும் பிடித்தமான சூர்யா நடிப்பில் வெளியான ஒரு படத்தை 12 ஹீரோக்கள் நிராகரித்துவிட்டனராம். அது எந்த படம் என்பது குறித்துப் பார்ப்போம்.

2005ம் ஆண்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான படம் கஜினி. ஒரு வித்தியாசமான கதையுடன், பரபரப்பான திரைக்கதையுடன் உருவாக்கப்பட்ட இந்த படம் பெரிய ஹிட் கொடுத்தது. காதல், த்ரில்லர் கலந்த இப்படம் ரசிகர்களின் பேராதரவைப் பெற்றது. இன்றுவரை கஜினி படத்திற்கு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.

அதுவும் சூர்யாவின் இரு வேறு கெட்டப்கள், மற்றும் நடிப்பு அவரின் கெரியரை உச்சத்திற்கு அழைத்துச் செல்ல மிகவும் உதவியாக இருந்தது. 100 கோடி வசூலை ஈட்டிய இப்படம், ஹிந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது. இதில் அமீர்கான், அசின் ஆகியோர் நடித்திருப்பர். ஏ.ஆர்.முருகதாஸே ஹிந்தியிலும் இயக்கினார். பாலிவுட்டிலும் பட்டையை கிளப்பியது.

இதுபோன்ற ஒரு கதையை நிராகரித்து,  இப்படத்தில் நடிக்க மாட்டேன் என்று 12 ஹீரோக்கள் கூறினார்களாம்.

முதலில் இயக்குனர் அஜித் குமார், பின் ஆர். மாதவன், மகேஷ் பாபு போன்ற நடிகர்களை அணுகினார். ஆனால் அவர்கள் அனைவரும் ஸ்கிரிப்ட் பிடிக்காததால் அந்த பாத்திரத்தை நிராகரித்தனர்.

ஆர்.மாதவனுக்கு இரண்டாம் பாதி பிடிக்காததால் படத்தில் நடிக்க நிராகரித்ததாக கூறிபட்டது. இதனையடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் கஜினி படம் ஒரு சரியான நபரிடம் சென்றதாக ஒரு முறை கூறியது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் ஹிந்தி ரீமேக் படத்திலும் அமீர்கானுக்கு முன்னர் சல்மான் கானிடமே பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

கஜினியின் தமிழ் படம் ரூ.7 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு பாக்ஸ் ஆபிஸில் ரூ.50 கோடி வசூலித்தது. இதற்கிடையில், இந்தி படம் 65 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டது. இப்படம் உலகம் முழுவதும் சுமார் 232 கோடி ரூபாய் வசூலித்ததாக சொல்லப்படுகிறது.

இந்தப் படத்தில் எந்த நடிகர் நடித்திருந்தாலும், அவரின் சினிமா கெரியர் உச்சத்தை அடைந்திருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT