Hanuman
Hanuman 
வெள்ளித்திரை

சரித்திர சாதனைப் படைத்த 'ஹனுமான்': 100 நாட்களைக் கடந்து மெகா வெற்றி!

ரா.வ.பாலகிருஷ்ணன்

ன்றைய சினிமா உலகில் வாரத்திற்குக் குறைந்தது 5 படங்களாவது வெளிவருகிறது. ஆனால், அதில் ஒருசில படங்கள்தான் கொஞ்சம் தாக்குப்பிடித்து திரையரங்குகளில் ஓடுகிறது. மற்றவை எல்லாம் வந்த இடம் தெரியாமல் ஒரு வாரத்திற்குள்ளேயே காணாமல் போகும் நிலையில் உள்ளது.

கடந்த சங்கராந்தி அன்று பான் இந்தியா படமாக வெளியான ‘ஹனுமான்’ திரைப்படம் 100 நாட்களைக் கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. கடந்த சில வருடங்களாக பான் இந்தியா திரைப்படங்கள், இந்திய அளவில் நல்ல வரவேற்பை பெற்றுவரும் நிலையில், ‘ஹனுமான்’ திரைப்படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்திருப்பது படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. 

பிரசாந்த் வர்மா இயக்கி, தெலுங்கு நடிகர் தேஜா சஜ்ஜா, வரலட்சுமி சரத்குமார், அம்ரிதா ஐயர் மற்றும் பலருடைய நடிப்பில் சங்கராந்தி தினத்தன்று திரைக்கு வந்த தெலுங்கு படம் ‘ஹனுமான்’. பான் இந்தியா திரைப்படமாக வெளிவந்து, சுமார் 300 கோடிகளுக்கும் அதிகமாக வசூலை வாரிக் குவித்துள்ளது இப்படம். 

திரைக்குப் பின் ஓடிடி-யில் ‘ஹனுமான்’ திரைப்படம் வெளியான பின்னரும், திரையரங்குகளில் இப்படத்திற்கான வரவேற்பு சிறிதளவும் குறையவில்லை. தற்போது ‘ஹனுமான்’ திரைப்படம் 100 நாட்களைக் கடந்து சாதனைப் படைத்துள்ளது. கடந்த 92 ஆண்டுகள் தெலுங்கு திரையுலக வரலாற்றில், சங்கராந்தியில் திரைக்கு வந்த திரைப்படங்களில் ‘ஆல் டைம் பிளாக்பஸ்டர்’ எனும் மெகா வெற்றியை இத்திரைப்படம் பெற்றுள்ளது.

‘ஹனுமான்’ திரைப்படத்தின் மெகா வெற்றி குறித்து படத்தின் கதாநாயகன் தேஜா சஜ்ஜா கூறுகையில், "நன்றி நிறைந்த இதயங்களுடன், ரசிகர்கள் ஆகிய நீங்கள் அனைவரும்தான் இந்தச் சாதனையை சாத்தியம் ஆக்கியுள்ளீர்கள் என்பதை எப்போதும் நினைவில்கொள்கிறேன். ‘ஹனுமான்’ எனது வாழ்நாளின் மிகவும் இனிப்பான நினைவுகளில் என்றுமே இருப்பார். உங்களின் பக்கத்து வீட்டு சூப்பர் ஹீரோ ஹனுமான்," என்றும் அவர் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

‘ஹனுமான்’ திரைப்படத்தின் இயக்குநர் பிரசாந்த் வர்மா கூறுகையில், "இந்த அற்புதம் நிறைந்த பயணத்தின் சிறந்த பகுதியாக இருந்த அனைத்து ரசிகர்களுக்கும், எனது இதயம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். ‘ஹனுமான்’ திரைப்படம் 100 நாட்கள் எனும் மெகா வெற்றியைத் திரையரங்குகளில் கொண்டாடுவது, நான் எனது வாழ்நாள் முழுவதும் கொண்டாடும் அற்புதமான தருணம் ஆகும். சமீப காலங்களில் 100 நாட்களுக்குத் திரைப்படங்கள் ஓடுவது என்பது மிகவும் அரிதான செயல். இந்நிலையில் ‘ஹனுமான்’ திரைப்படத்தை 100 நாட்கள் என்ற மைல்கல்லை வழங்கிய அனைத்து ரசிகர் பெருமக்களுக்கும் நன்றி. எப்போதும் அமோகமான ஆதரவளிக்கும் ஊடகத் துறை நண்பர்களுக்கும், எனது ஒட்டுமொத்த திரைப்படக் குழுவிற்கும் மிக்க நன்றி," எனக் கூறியுள்ளார்.

100 நாட்களைக் கடந்து வெற்றிகரமான சாதனையைப் படைத்திருக்கும் ‘ஹனுமான்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம், அடுத்த ஆண்டு வெளியாகும் என ஏற்கனவே திரைப்படத்தின் முடிவில் சொல்லப்பட்டு விட்டது. இந்நிலையில், ரசிகர்கள் அனைவரும் ‘ஹனுமான்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

ஹைப்பர் டென்ஷனை கட்டுப்படுத்தும் 11 மூலிகைகள்!

ஆழ்வார்திருநகரியும் ஒன்பது கருட சேவையும் பற்றி தெரியுமா?

கோடைக்கால உடல் பிரச்னைகளை குணமாக்கும் பழம்பாசி சஞ்சீவி மூலிகை!

துரோகம் செய்யும் உறவுகளை சமாளிப்பது எப்படி?

இருமுனைக் கோளாறு நோயின் அறிகுறிகளைக் கண்டறிவது எப்படி?

SCROLL FOR NEXT