படபிடிப்பின்போது நடிகர் விஜயை அவரது அப்பா அடித்தார் என்று நடிகர் பொன்னம்பலம் பகிர்ந்துக்கொண்டதை குறித்துதான் இந்தத் தொகுப்பில் பார்க்கவுள்ளோம்.
குட்டீஸ் முதல் பெரியவர்கள்வரை அனைவருக்கும் பிடித்த ஒரு நடிகர் விஜய். இவரின் இந்த சாதனைப் பயணம் அவ்வளவு எளிதானதாக அமையவில்லை. பெரிய பெரிய கஷ்டங்களை எதிர்க்கொண்ட இவருக்கு எத்தனையோ கதைகள் இருந்திருக்கும். ஒவ்வொருமுறையும் இவர் படத்தின் அப்டேட்டுக்காக காத்திருக்கும் ரசிகர்கள், இப்போது அவரின் கடைசி படத்தின் அப்டேட்டுக்காக காத்திருக்கும் நிலை வந்துள்ளது. சினிமா பயணத்தை இன்னும் ஒரு படத்துடன் முடிவுக்கு கொண்டு வரப் போகிறார் விஜய்.
கலை பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, அரசியல் பயணத்தைத் தொடங்கவிருக்கும் விஜய்க்கு வாழ்த்துக்கள் சொல்வதா? அல்லது கோரிக்கை விடுவதா? என்று ரசிகர்கள் குழம்பித் தவிக்கிறார்கள். இனி இந்த பிக் ஸ்கிரீனில் தளபதியை எப்போதும் பார்ப்போம் என்ற கேள்விக்கு, பார்க்கவே முடியாது என்ற பதில் வரும் காலம் விரைவில் வரவுள்ளது.
அந்தவகையில் அவரின் சினிமா பயணத்தின் முதல் படம்தான் வெற்றி. இப்படத்தை அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கினார். அதேபோல் விஜயகாந்த் ஹீரோவாக நடித்தார். இப்படத்தில் விஜயின் முதல் சம்பளம் 500 ரூபாய். இன்று கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் இவர் முதன்முதலில் வாங்கிய சம்பளம் 500ரூபாய். அந்தவகையில் விஜய் குறித்து பொன்னம்பலம் பேசியது குறித்து பார்ப்போம்.
“செந்தூரப்பாண்டி படம் அப்போ எல்லாம் விஜயை எல்லாரும் ஒரு அன்ஃபிட் ஹீரோவாதான் பார்த்தாங்க. ஆரம்பத்துல விஜய் சினிமாவில் இன்ட்ரஸ்ட் இல்லாமதான் இருந்தாரு. அவுங்க அப்பாதான் ரொம்ப கஷ்டப்பட்டாரு. உன்ன முன்னுக்கு கொண்டுவர நான் எவ்ளோ கஷ்டப்படுறேன், எவ்வளவு கடன் வாங்கி இருக்கேன்னு சொல்லிட்டே இருப்பாரு. ஷூட்டிங் ஸ்பாட்ல கூட விஜயை அவுங்க அப்பா சில நேரம் அடிச்சுருவாரு. எனக்கே பாவமா இருக்கும்.” என்று பகிர்ந்திருந்தார் நடிகர் பொன்னம்பலம்.
எட்டா கனியையும் எட்டிப் பறிக்க வேண்டுமென்றால், பெரிய கஷ்டங்களையும் மனவலிகளையும் கடந்தே ஆக வேண்டும் என்பதுதான் விதிமுறை.