வெள்ளித்திரை

79 வயதில் 7வது குழந்தைக்கு தந்தையான ஹாலிவுட் நடிகர்!

ஜெ.ராகவன்

ஹாலிவுட் நடிகர் ராபர் டீ நீரோ, சமீபத்தில் கனடா நாட்டு தொலைக்காட்சிக்கு பேட்டியளிக்கையில், 79 வயதில் 7-வது குழந்தைக்கு தந்தையாகி இருப்பதாகத் தெரிவித்தார்.

ஆஸ்கர் விருதுபெற்ற ஹாலிவுட் நடிகரான நீரோ, “எபெளவுட் மை ஃபாதர்” (About My Father) என்னும் திரைப்படம் வெளிவர இருக்கும் நிலையில் அந்த படத்தை விளம்பரப்படுத்தும் வகையில் அளித்த பேட்டியின்போது 7-வது குழந்தைக்கு தந்தையான தகவலையும் திறந்த மனதுடன் வெளியிட்டார்.

சட்டம் போன்ற விஷயங்களைப் பேசுவதில் எனக்கு விருப்பமில்லை. ஆனால், சில சமயங்களில் எதையாவது பேச வேண்டுமே. குழந்தைகளைச் சுற்றித்தான் பேச வேண்டும். பெற்றோர்கள் எல்லோரும் அதைப் பற்றித்தான் பேசுவார்கள். நீங்கள் எப்போது சரியான செயலைச் செய்து குழந்தைகளுக்கு சந்தேகத்தின் பலனை கொடுக்க விரும்புகிறீர்கள். ஆனால், சில சமயங்களில் அது முடியாமல் போய்விடுகிறது. உங்களது 6 குழந்தைகளைப் பற்றி சொல்லுங்கள் என்றபோது நீரோ எனக்கு உண்மையில் 7 குழந்தைகள் உள்ளன என்று திருத்தினார்.

எனக்கு இப்போது ஒரு குழந்தை பிறந்துள்ளது என்று தெரிவித்த அவர், புதிய குடும்ப உறுப்பினர் பற்றியோ அல்லது தனது துணையை பற்றியோ அவர் விவரிக்கவில்லை.

எனினும் நடிகர் ராபர்ட் டீ நீரோவின் சார்பிலான ஒருவர் அவருக்கு 7 குழந்தைகள் உள்ளதை உறுதிப்படுத்தினார்.

அகாதெமி விருதுபெற்ற நீரோவுக்கு 6 குழந்தைகள் உள்ளன. அவரது முதல் மனைவி டயானா அப்போட் மூலம் மகள் திரேனா (51), மகன் ராஃபேல் (46) உள்ளனர். 1995 ஆம் ஆண்டு முன்னாள் நடிகையும், விளம்பர மாடலுமான டுக்கி ஸ்மித் மூலம் ஜூலியன் மற்றும் ஆரோன் என்ற இரட்டை குழந்தைகள் (இருவருக்கும் வயது 27) உள்ளன. மேலும் முன்னாள் மனைவி கிரேஸ் மூலம் தமக்கு 24 வயது மகன் எலியட் மற்றும் 11 வயதில் ஹெஸன் கிரேஸ் என்ற மகளும் உள்ளதாக நீரோ குறிப்பிட்டுள்ளார்.

காட் ஃபாதர் நடிகரும் தாத்தாதான். பெற்றோராக, தாத்தா, பாட்டியாக இருப்பதன் மூலம் குழந்தைகள் தங்கள் கனவுகளை அடைய ஊக்குவிக்க முடியும் என்கிறார் நீரோ.

“நீங்கள் நடிகரா விரும்பினாலோ அல்லது இதைச் செய்யவிரும்பினாலோ அல்லது அதைச் செய்ய விரும்பினாலோ மகிழ்ச்சியுடன் செய்யுங்கள். நீங்களே உங்களை குறைத்து மதிப்பிடாதீர்கள்” என்று குழந்தைகளிடம் நான் அடிக்கடி கூறுவேன்.

எதற்கு பயப்படாதீர்கள். நீங்கள் எந்த நிலையை அடைய விரும்புகிறீர்களோ அதை அடைவதற்கான வழியைத் தேடுங்கள் என்று அவர்களிடம் கூறுவேன், அவர்களை ஊக்கப்படுத்திக் கொண்டே இருப்பேன். அவரவர்களுக்கு வேண்டியதை அவரவர்கள்தான் தேடிக் கொள்ள வேண்டும் என்கிறார் ஹாலிவுட் நடிகர் ராபர்ட் டீ நீரோ.

தஞ்சை பெருவுடையார் கோயிலின் 10 ஆச்சரியத் தகவல்கள்!

இந்த 6 அறிகுறிகள் உங்கள் வாழ்க்கையில் இருந்தால் ஜாக்கிரதை!  

11 வாரம் 11 சுற்று பிரதட்சிணம் செய்ய தோஷம் நீக்கி அருளும் சனி பகவான்!

மறந்துபோன இந்த கீரைகளின் மகத்துவம் தெரியுமா?

குள்ள நீர்யானைக் குட்டியும், அரிய வகை டைனோசர் இனமும்! 

SCROLL FOR NEXT