Vijay sethupathi 
வெள்ளித்திரை

நான் romance- லாம் நல்லா பண்ணுவேன் சார் - விஜய் சேதுபதி!

பாரதி

வெவ்வேறு விதமான கதாபாத்திரங்களில் நடித்து, அத்தனை பாத்திரங்களிலும் மக்களின் பேராதரவை பெற்ற விஜய் சேதுபதி, ஒரு பேட்டியில் நான் நன்றாக ரொமான்ஸ் செய்வேன் என்று கூறியிருக்கிறார். இது நிஜமா?

விஜய் சேதுபதி தனித்துவமான கதாபாத்திரங்களில் நடித்து மக்களின் மனதில் இடம்பிடித்தவர். சில காலங்கள் நல்ல படங்களில் நடித்தாலும், வசூல் ரீதியாக அவர் படங்கள் ஓடவில்லை என்றே கூற வேண்டும். ஆனால், சமீபத்தில் வெளியான மகாராஜா படம் 100 கோடி வசூலை ஈட்டி விமர்சன ரீதியாகவும் பெரிய வெற்றிபெற்றது.

குடும்ப படமாக உருவான மகாராஜா படத்தில், விஜய் சேதுபதி அப்பா கதாபாத்திரத்தில் நடித்து கலக்கியிருந்தார்.

அந்தவகையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் விஜய் சேதுபதிக்கு காதல் படங்கள் வருவதில்லை என்பது குறித்து கேட்டபோது விஜய் சேதுபதி, “ நான் ரொமான்ஸ் நல்லாவே பண்ணுவேன் சார். கருப்பன், தர்மதுரை, 96 எல்லாமே லவ் படங்கள்தான். நானுமே தேடுறேன், அந்த மாதிரியான படங்களை. காதல் என்பது தீர்ந்தே போகாத ஒன்று. விடுதலை 2ல் கூட வெற்றிமாறன் சார் லவ் சீன் வச்சுருக்காரு. நான் ரொம்ப ரசிச்சேன். அதேமாதிரி அவர்கிட்ட சொல்லிட்டேன், தயவுசெஞ்சு இதுல என்ன தனியா விட்ருங்கன்னு. நான் ரொம்பவே என்ஜாய் பண்ணுவேன்.

அது கேமரா முன்னாடினாலும் சரி, பின்னாடினாலும் சரி. காட்சிகளில் சில நொடிகள் இருந்தாலும் கூட, அத நிஜம் என்று நம்புவேன். அத ஃபீல் பண்ணலாம் முடியாது. இரண்டு கண்கள் சந்திக்கும்போது, ஆத்மார்த்தமா பாக்குறதும், நம்புறதும் ஒரு சுகமான அனுபவம். எத்தனை பேருக்கு அந்த பாக்கியம் இருக்கும் சொல்லுங்களேன்? காதல் எல்லாருக்கும் காலம் முழுவதும் இருக்கும்

இப்போ எனக்கு வயது 45, படத்துல நான் கொஞ்சம் பின்னாடி போய் 35 வயதுல காதல எக்ஸ்பிரஸ் பன்ற மாதிரி இருக்கும்ல… அத என்னாலேயே நம்பமுடியாது…” என்று காதல் குறித்து ஆத்மார்த்தமாக பேசினார்.

குறைந்தபட்சம் ஒருவனுக்கு ஒரு காதல் இருக்கும். ஆனால், நடிகனுக்கு எவ்வளவு காதல்கள்? கேமராவிற்கு முன் இரண்டு நிமிட காதல் அனுபவமும் , வாழ்க்கை முழுவதும் செய்யக்கூடிய காதலும் ஆத்மார்த்தமானதே என்பதை அழகாக கூறியிருக்கிறார், விஜய் சேதுபதி.

இந்த சின்னஞ்சிறு காயில் ஒளிந்திருக்கும் சூப்பர் நன்மைகள் தெரியுமா?

குழந்தைகளுக்கு வளர்ச்சி மொழிக் கோளாறு ஏற்படுத்தும் சிக்கல்கள்!

முகத்துக்கு நீராவி பிடிங்க… கரும்புள்ளிகள் எல்லாம் காணாமல் போகும்! 

பார்ப்பதற்கும் கவனிப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை உணர்த்திய துரோணாச்சாரியார்!

வயதாகும் வேகத்தைக் குறைக்க விபரீத முடிவெடுத்த தொழிலதிபர்!

SCROLL FOR NEXT