Indian 2 
வெள்ளித்திரை

இந்தியன் 2 குறித்து அடுத்தடுத்து மாஸ் அப்டேட்... ஆடியோ லாஞ்ச்... 2வது பாடல் தேதி அறிவிப்பு!

விஜி

பல வருடங்களுக்கு பிறகு 2ஆம் பாகமாக உருவாகும் இந்தியன் படத்தின் முதல் பாடல் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் நாளை 2வது பாடல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட்டான திரைப்படம் தான் இந்தியன். பல ஆண்டுகள் கழித்து அந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை தற்பொழுது எடுத்து முடித்திருக்கிறார் இயக்குனர் சங்கர். மேலும் இந்தியன் 2 திரைப்படம் வருகின்ற ஜூலை மாதம் 12ஆம் தேதி உலக அளவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல எதிர்வரும் 2025ம் ஆண்டு பொங்கலுக்கு இந்தியன் படத்தின் மூன்றாம் பாகம் வெளியாகும் என்றும் அதிகாரப்பூர் அறிவிப்புகள் தற்போது வெளியாகி உள்ளது.

கமல்ஹாசனும் இயக்குனர் ஷங்கரும் முதன்முறையாக இணைந்து பணியாற்றிய படம் இந்தியன். கடந்த 1996-ம் ஆண்டு திரைக்கு வந்த இப்படம் மிகப்பெரிய வெற்றியை ருசித்தது. அப்படத்தின் வெற்றிக்கு பின் தற்போது சுமார் 18 ஆண்டுகள் கழித்து அவர்கள் இருவரும் இந்தியன் 2 படத்துக்காக மீண்டும் இணைந்துள்ளனர். இப்படத்தை லைகா நிறுவனமும், ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனமும் இணைந்து மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்து வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் முதல் பாடலான "பாரா" என்கின்ற பாடல் வெளியாகி கவனம் பெற்றுள்ளது. தொடர்ந்து நாளை இந்த படத்தின் 2வது சிங்கிள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான போஸ்டரில் சித்தார்த் மற்றும் ரகுல் ப்ரீத் சிங் இடம்பெற்றுள்ளனர். இது இருவருக்கும் இடையே உள்ள காதல் பாடல் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி வருகிற ஜூன் 1-ந் தேதி இந்தியன் 2 படத்தின் பிரம்மாண்ட ஆடியோ லாஞ்ச் சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

பெண்களுக்கு ஏற்படும் மெனோபாஸ்: Hot Flashes என்றால் என்ன? கையாள்வது எப்படி?

இந்த சின்னஞ்சிறு காயில் ஒளிந்திருக்கும் சூப்பர் நன்மைகள் தெரியுமா?

குழந்தைகளுக்கு வளர்ச்சி மொழிக் கோளாறு ஏற்படுத்தும் சிக்கல்கள்!

முகத்துக்கு நீராவி பிடிங்க… கரும்புள்ளிகள் எல்லாம் காணாமல் போகும்! 

பார்ப்பதற்கும் கவனிப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை உணர்த்திய துரோணாச்சாரியார்!

SCROLL FOR NEXT