Indian 2
Indian 2 
வெள்ளித்திரை

கமல் ரசிகர்களுக்கு வந்தாச்சு ட்ரீட்... இந்தியன் 2 முதல் பாடல் இதோ!

விஜி

பல வருடங்களுக்கு பிறகு 2ஆம் பாகமாக உருவாகும் இந்தியன் படத்தின் முதல் பாடல் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது.

பிரபல இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட்டான திரைப்படம் தான் இந்தியன். பல ஆண்டுகள் கழித்து அந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை தற்பொழுது எடுத்து முடித்திருக்கிறார் இயக்குனர் சங்கர். மேலும் இந்தியன் 2 திரைப்படம் வருகின்ற ஜூலை மாதம் 12ஆம் தேதி உலக அளவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல எதிர்வரும் 2025ம் ஆண்டு பொங்கலுக்கு இந்தியன் படத்தின் மூன்றாம் பாகம் வெளியாகும் என்றும் அதிகாரப்பூர் அறிவிப்புகள் தற்போது வெளியாகி உள்ளது.

கமல்ஹாசனும் இயக்குனர் ஷங்கரும் முதன்முறையாக இணைந்து பணியாற்றிய படம் இந்தியன். கடந்த 1996-ம் ஆண்டு திரைக்கு வந்த இப்படம் மிகப்பெரிய வெற்றியை ருசித்தது. அப்படத்தின் வெற்றிக்கு பின் தற்போது சுமார் 18 ஆண்டுகள் கழித்து அவர்கள் இருவரும் இந்தியன் 2 படத்துக்காக மீண்டும் இணைந்துள்ளனர். இப்படத்தை லைகா நிறுவனமும், ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனமும் இணைந்து மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்து வருகிறது.

இந்நிலையில் இன்று இந்த படத்தின் முதல் பாடலான "பாரா" என்கின்ற சிங்கிள் பாடல் வெளியாகி கவனம் பெற்றுள்ளது. நேற்று இந்த பாடலில் புரோமோ பாடல் வெளியாகி யூடியூப்பில் டாப் இட ட்ரெண்டிங்கில் இடம்பெற்றுள்ள நிலையில், இன்று இந்த முழு பாடலும் வெளியாகியுள்ளது. பாரா வருவது ஒராட் படையா என தொடங்கும் இந்த பாடல் கேட்போரை சிலிர்க்க செய்யும் வகையில் அமைந்துள்ளது.

முதல் முறையாக இயக்குனர் சங்கர் இயக்கத்தில் அனிருத் இசையமைத்துள்ள நிலையில் இந்த பாரா பாடல் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. தனது வழக்கமான பாணியில் இருந்து முற்றிலும் மாறுபட்ட இசையை அனிருத் கொடுத்துள்ளார் என்றே கூறலாம். கிட்டத்தட்ட பொன்னியின் செல்வன் பட பாணி போன்று மன்னர் கால பாடல் போன்றே உருவாகியுது. இந்த பாடல் வெளியான சில மணி நேரங்களிலேயே தற்போது ரசிகர்களிடையே சிறப்பு கவனம் பெற்றுள்ளது.

சர்க்கரை: இது உணவல்ல விஷம்! 

சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?

தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்து வந்தால் என்ன ஆகும் தெரியுமா? 

மிகப்பெரிய தொழில்நுட்ப சாதனைக்கு வழிகாட்டிய குட்டிப் பறவை!

நாம் பிறந்தது எதனால்? நாம் ஏன் வாழணும்?

SCROLL FOR NEXT