இந்தியன் 2
இந்தியன் 2 
வெள்ளித்திரை

வெளியானது இந்தியன் 2 அப்டேட்.. ஏப்ரலில் ரிலீஸா?

விஜி

ந்தியன் 2 படத்தில் நடிகர் கமலஹாசனின் எஞ்சிய காட்சிகளுக்கான படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், நடிகர் கமல் ஹாசன் நடித்து வரும் திரைப்படம் 'இந்தியன் 2'. இந்த படத்தின் முதல் பாகம், மிகப் பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம், எடுக்கப் பட உள்ளதாக கடந்த நான்கு வருடத்திற்கு முன்பு அறிவிக்கப்பட்டது.

கமல் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் தற்போது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். கடந்த 1996-ல் வெளிவந்த இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமாக இந்தப் படம் உருவாகி வருகிறது.

இதில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது.

தற்போது இந்தியன் 2 படத்தின் கமல்ஹாசன் நடிக்க இருந்த மொத்த காட்சிகளும் எடுத்து முடிக்கப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. படம் பொங்களுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,ஏப்ரல் மாதம் கோடை விடுமுறைக்கு படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காகத்திற்கு உணவு வைப்பதன் அவசியம் என்னவென்று தெரியுமா?

அமிதிஸ்ட் கற்களைப் பயன்படுத்தினால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

கண்களைக் கட்டிக்கொண்டு பெருமாளுக்கு கிரீடம் சாத்தும் கோயில் எது தெரியுமா?

ஊட்டச்சத்து நிறைந்த விதவித சப்பாத்திகளின் ஆரோக்கிய நன்மைகள்!

செல்வ செழிப்பு தரும் சில எளிய வாஸ்து குறிப்புகள்!

SCROLL FOR NEXT