Indian movie  
வெள்ளித்திரை

இந்தியன் 2 முன்பே ரீ-ரிலீசாகும் இந்தியன்... எப்போது தெரியுமா?

விஜி

கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் திரைப்படம் 28 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-ரிலீஸாகவுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பிரபல இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட்டான திரைப்படம் தான் இந்தியன். பல ஆண்டுகள் கழித்து அந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை தற்பொழுது எடுத்து முடித்திருக்கிறார் இயக்குனர் சங்கர். மேலும் இந்தியன் 2 திரைப்படம் வருகின்ற ஜூலை மாதம் 12ஆம் தேதி உலக அளவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் கமலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி என பலர் நடித்துள்ளனர். அதேபோல எதிர்வரும் 2025ம் ஆண்டு பொங்கலுக்கு இந்தியன் படத்தின் மூன்றாம் பாகம் வெளியாகும் என்றும் அதிகாரப்பூர் அறிவிப்புகள் தற்போது வெளியாகி உள்ளது.

கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து அசத்திய இந்தியன் படம் விழிப்புணர்வு நிறைந்த அதிரடி திரைப்படமாகும். இதில் நடிகர் கமல்ஹாசன் ‘சேனாபதி’ என்ற வயதான சுதந்திரப் போராட்ட வீரராக நடித்தார். ஊழலுக்கு எதிராக போராடிய சேனாதிபதி இந்தியாவை விட்டு ஓடிப்போய் ஹாங்காங் செல்வதுடன், ஊழல் எப்போதாவது திரும்பினால் திரும்பி வருவேன் என்று மிரட்டுவதுடன் ‘இந்தியன்’ முதல் பாகம் முடிந்தது.

இந்தியன் 2 திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். லைகா மற்றும் ரெட் ஜெய்ண்ட் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. ‘இந்தியன் 2’ திரைப்படம் இறுதிகட்ட படப்பிடிப்பை எட்டியுள்ள நிலையில், இந்த திரைப்படத்தின் முதல் பாடலான ‘பாரா’ சில நாட்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இந்தியன் 2 திரைப்படம் வெளியாகும் நிலையில் இந்த திரைப்படத்தின் பாகம் 1 ரீ-ரிலிஸ் செய்வதற்கு படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இந்தியன் திரைப்படம் வரும் ஜூன் 7ம் தேதி வெளியாகவுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாகவுள்ளது. 28 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-ரிலிஸ் செய்யப்படும் இத்திரைப்படத்தை பார்க்க ரசிகர்களிடையே ஆர்வம் உருவாகியுள்ளது. சமீப காலமாகவே ரீ-ரிலீஸ் கலாச்சாரம் அதிகரித்து வரும் நிலையில், இந்த சம்பவத்தால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT