MGR and Ameer 
வெள்ளித்திரை

எம்.ஜி.ஆர்- ஐ புரட்சித் தலைவர் என கூறுவது சரியா? - இயக்குனர் அமீர் ஆவேசம்!

பாரதி

செய்தியாளர் சந்திப்பில், எம்ஜிஆர்-ஐ புரட்சி தலைவர் என்று கூறுவது சரியா? என்று அமீர் எழுப்பிய கேள்வி சமூக வலைத்தளங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதலில் இயக்குனர் பாலாவின் உதவி இயக்குனராக பணிப்புரிந்த அமீர், நந்தா மற்றும் சேது ஆகிய படங்களில் பணியாற்றினார். அதன்பின்னர், 2002ம் ஆண்டு மௌனம் பேசியதே படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் அமீர். பின்னர் இவர் ராம், பருத்திவீரன், ஆதிபகவன் போன்ற பல படங்களை இயக்கி இருந்தார். இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் மக்களிடையே நல்ல வரவேற்பையப்பெற்றன. அமீர் படங்களை இயக்குவதோடு, ப்ரொடக்ஸ்ன் செய்யவும் ஆரம்பித்தார். அவர் Teamwork Production House என்ற பெயரில் சொந்தப் படத் தயாரிப்பு நிறுவனத்தையும் வைத்து இருக்கிறார்.

இதனையடுத்து தற்போது அமீர் ‘உயிர் தமிழுக்கு’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். இப்படத்தில், சாந்தினி ஸ்ரீதரன், ஆனந்த ராஜ், இமான் அண்ணாச்சி ஆகியோரும் நடித்துள்ளனர். அரசியல் பின்னணியில் உருவான இப்படத்திற்கு வித்தியாசாகர் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் ப்ரொமோஷன் பணிகள் சில நாட்களாக நடந்து வந்தன. அப்போது ஒரு செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமீர், “படத்தில் எனது பெயருக்கு முன்னர் மக்கள் போராளி என்று வைத்திருந்தனர். படங்களும் விருதுகளும் தகுதியின் அடிப்படையில் வர வேண்டும். அதனை நாம் காசு கொடுத்து வாங்கக் கூடாது.

எம்ஜிஆருக்கு மக்கள் திலகம் என்ற பட்டம் சரியானது. ஆனால், புரட்சித் தலைவர் என்ற பட்டம் சரியானதா? என்று கேட்டால் அது பெரிய கேள்விக்குறி தான். புரட்சி என்பது சாதாரணமானது கிடையாது. இந்த உலகைப் புரட்டி போடும் அளவிற்கு புரட்சி செய்த புரட்சியாளர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

மேலும் அமீர் போராளி பட்டத்தை பற்றி கூறுகையில், "நான் நான்கு படம் எடுத்து, இரண்டு படத்தில் நடித்திருக்கிறேன். அதனால் நான் ஒரு போராளி என்றெல்லாம் சொல்ல முடியாது. மாஞ்சோலை தேயிலை தொழிலாளர்கள் தாமிரபரணியில் சம்பள ஊதியம் கேட்டு இறந்தார்கள். அந்த போராளிகளை எப்படி பார்ப்பது? இப்போது தூத்துக்குடியில் 13 போராளிகள் இறந்தார்கள். நம் மண்ணை மீட்பதற்காக பலர் உயிர்த் தியாகம் செய்தார்கள். ஆகவே அவர்கள் தான் போராளி” என்றார்.

Jeff Bezos-ஐ கோடீஸ்வரன் ஆக்கிய விதி என்ன தெரியுமா? 

முகத்தை மூடித் தூங்குபவரா நீங்கள்? அச்சச்சோ போச்சு!

குளிர்காலத்தில் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் உணவுகள்!

முகம் ஒரு ஓவியம் என்றால், உதடுகள் அதன் இதயம்!

மரங்களைப் பற்றி மனிதர்கள் ஏன் கவலைப்படுவதில்லை?

SCROLL FOR NEXT