Sivakarthikeyan - Jayamravi  
வெள்ளித்திரை

சிவகார்த்திகேயனுடன் மோதும் ஜெயம் ரவி.. தீபாவளி ரேஸில் இணைந்த படம்!

விஜி

தீபாவளி பண்டிகைக்கு சிவகார்த்திகேயன் நடிக்கும் அமரன் படம் ரிலீஸ் ஆகும் நிலையில், அதற்கு போட்டியாக மற்றொரு படம் களமிறங்கி உள்ளது.

தீபாவளி பண்டிகை என்றாலே கண்டிப்பாக புதுப்படங்கள் ரிலீஸ் ஆகும். அதுவும் பெரிய நடிகர்களின் படங்கள் தான் வரிசைகட்டி ரிலீஸ் ஆகும். அப்படி இந்த ஆண்டு தீபாவளிக்கு இன்னும் மூன்று மாதங்கள் இருக்கும் நிலையில், அதற்குள் அதற்கான போட்டி தற்போதே தொடங்கிவிட்டது. அந்த வகையில், தீபாவளி ரேஸில் முதலாவதாக களமிறங்கிய திரைப்படம் அமரன். சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி உள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக பொங்கலுக்கு அயலான் திரைப்படம் வெளியானது. சயின்ஸ் பிக்‌ஷனாக உருவாக்கப்பட்ட இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் நல்ல வசூலை பெற்றது. இதனை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் SK 21 படத்தில் நடித்து வருகிறார். ராணுவ வீரராக இப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார். ஜி.வி பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைக்க கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது. மேஜர் முகுந்த் வரதராஜன் என்கிற ராணுவ வீரரின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படத்தை எடுத்துள்ளனர். இப்படம் வருகிற அக்டோபர் 31ந் தேதி திரைக்கு வர உள்ளது.

காஷ்மீரில் உள்ள இந்திய ராணுவத்திருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடக்கும் மோதலை மையமாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

தீபாவளி ரேஸில் முதல் ஆளாக களமிறங்கிய சிவகார்த்திகேயனுக்கு போட்டியாக தற்போது ஜெயம் ரவி படம் ஒன்று களத்தில் குதித்துள்ளது. எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி ஹீரோவாக நடித்துள்ள பிரதர் திரைப்படமும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும் சீதா, சரண்யா பொன்வண்ணன், நட்டி நட்ராஜ், பூமிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏற்கனவே அஜித் படமும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் அதிகரித்து வரும் காற்று மாசு!

மைக்ரோ கீரைகள் பற்றி தெரியுமா உங்களுக்கு? சாகுபடி முறை இதோ!

Buddha Quotes: புத்தரின் 15 வாழ்வியல் கருத்துக்கள்!

இரவில் தாமதமாக சாப்பிடுபவரா நீங்க? அச்சச்சோ, அது ரொம்ப தப்பாச்சே!

காலம் காலமாக நின்று பேசும் மாமல்லபுரமும் மறக்கப்பட்ட மாமல்லனும்!

SCROLL FOR NEXT