வெள்ளித்திரை

களைகட்டுகிறது கத்ரினா கைஃப் கல்யாணம்! பானி பூரிக்கு தனி ஸ்டால்!

கல்கி

பிரபல பாலிவுட் நடிகை கத்ரினா கைஃப்புக்கும் விக்கி கவுஷலுக்கும் நடக்கவுள்ள திருமணம் பற்றி பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.

பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவரான கத்ரினா கைஃப்பின் தந்தை காஷ்மீரைச் சேர்ந்தவர். தாயார் பிரிட்டன் நாட்டவர். 'பூம்' திரைப்படம் மூலம் பாலிவுட் சினிமாவுக்கு அறிமுகமான, கத்ரினா அடிக்கடி காதல் கிசுகிசுக்களிலும் சிக்கியுள்ளார். இந்நிலையில் அவர் தன்னை விட 5 வயது சிறியவரான நடிகர் விக்கி கவுஷலை திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளார். இவர்கள் இருவருக்கும் நாளை (டிசம்பர் 9) ராஜஸ்தானிலுள்ள 700 ஆண்டுகள் பழமையான கோட்டையில் நடைபெற உள்ளது.

இத்திருமணம் குறித்து கத்ரீனா தரப்பில் வெளியான தகவல்கள்:

இந்த திருமணத்திற்கு வெறும் 120 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திருமணத்திற்கு பாலிவுட் நடிகர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் வரக்கூடும் என்பதால் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சவாய் மதோப்பூரில் உள்ள கோட்டையைச் சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கத்ரீனா கைஃப் விக்கி கவுஷல் திருமணத்தில் செல்போன் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருமண விருந்தில் இந்திய மற்றும் மேற்கத்திய ஸ்பெஷல் கத்ரீனா தனிப்பட்ட முறையில் தேர்வு செய்துள்ளார். திருமண இடத்தில் பானி பூரி, கச்சோரி மற்றும் சாட் ஸ்டால்கள், கபாப்கள் மற்றும் பாரம்பரிய ராஜஸ்தானி உணவுகள் ஆகியவற்றுக்கு தன் ஸ்டால்கள் உண்டு. மேலும் இத்தாலியைச் சேர்ந்த சமையல்காரரால் தயாரிக்கப்பட்ட நீலம் மற்றும் வெள்ளை நிற ஐந்து அடுக்கு டிஃப்பனி திருமண கேக் திருமண விருந்தில் ஸ்பெஷல் ஐட்டமாக இடம்பெறும்.

இவ்வாறு கத்ரீனா திருமணத்தில் இடம்பெறும் விருந்துவகைகள் குறித்து தெரிவிக்கப் பட்டுள்ளது.

சுயபுத்தி போனாலும், சொல்புத்தி வேண்டும்!

கோடை வெயிலுக்கேற்ற நுங்கு நாட்டுச்சர்க்கரை குல்பி!

ப்ளஸ் 2வில் அதிக மதிப்பெண் எடுத்த சூர்யா - ஜோதிகா மகள்... குவியும் வாழ்த்துக்கள்!

அப்பாவாக போவதை ஈஸ்வரியிடம் கூறிய கோபி... அடுத்து என்ன நடக்கும்... அனல் பறக்கும் பாக்கியலட்சுமி புரோமோ!

தேர்வில் வெற்றி பெறாத மாணவர்களுக்கு மனநல ஆலோசனை: அரசு ஏற்பாடு!

SCROLL FOR NEXT