Kalanithi Maran and Dhanush 
வெள்ளித்திரை

தனுஷுக்கு இரண்டு செக் கொடுத்து அசத்திய கலாநிதி மாறன்!

ராஜமருதவேல்

நடிகர் தனுஷ்  இரண்டாவது முறையாக இயக்கி நடித்த திரைப்படம் ராயன் . இத்திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், அபர்ணா பாலமுரளி, பிரகாஷ் ராஜ், வரலட்சுமி சரத்குமார், சரவணன், செல்வ ராகவன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். படத்தின் பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் ஆகியிருந்தது. இத்திரைப்படம் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகியுள்ளது. தனுஷ் இதற்கு முன்னர் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆடுகளம் படத்திலும் நடித்துள்ளார். ராயன் திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை பெற்றது. 

வழக்கமாக நடிகர்களின் 50 வது மற்றும் 100 வது திரைப்படங்களை தோல்வியை தழுவும் நிலையில் தனுஷின் 50 வது திரைப்படம் வெற்றியை பெற்றுள்ளது. ராயன் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள வன்முறைக் காட்சிகள் விமர்சனத்துக்கு உள்ளாகியது. 70 கோடி பட்ஜெட்டில் உருவாகிய இத்திரைப்படம் 158 கோடி ரூபாய் உலகெங்கிலும் வசூலித்துள்ளது. அனைத்து நேரத்திலும் அதிக வசூல் செய்த ஏ-ரேட்டிங் பெற்ற தமிழ்த் திரைப்படம் என்ற பெருமையும் பெற்றது. 2024 ஆம் ஆண்டு இதுவரை, அதிக வசூல் செய்த தமிழ்த் திரைப்படமாக ராயன் உள்ளது. 

ராயனின் பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து  நடிகரும் இயக்குனருமான தனுஷுக்கு படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் வாழ்த்து தெரிவித்து இருந்தார். அதைத் தொடர்ந்து தனுஷ் படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்ததாக அறிக்கை வெளியிட்டார். அதில், “எனது ஆதரவுத் தூண்களான ரசிகர்களாகிய நீங்கள் பொழிந்த எல்லா ஆசீர்வாதங்களுக்கும் நன்றி. இதுதான் எனக்கு சிறந்த பிளாக்பஸ்டர் பிறந்தநாள் பரிசு” என்று நெகிழ்ச்சியுடன் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

ராயன் திரைப்படம்  தொடர்ந்து 25 நாட்களுக்கு மேல் திரையரங்கில் ஓடி வரும் நிலையில், அத்திரைப் படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தனுஷை சந்தித்துப் பாராட்டியுள்ளார். தனுஷுக்கு இரண்டு காசோலைகள் கொடுத்து அவருக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார். ஒரு காசோலை நடிகர் தனுஷுக்கும் இன்னொரு காசோலை இயக்குனர் தனுஷுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான ஜெயிலர் படத்திற்காக ரஜினி, நெல்சன், அனிருத் உள்ளிட்டோருக்கு விலையுயர்ந்த கார் மற்றும் காசோலையைக் கலாநிதி மாறன் வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் அமேசான் பிரைம் ஓடிடியில் ஆக.23 அன்று வெளியாகியுள்ளது.

வெற்றி அடைய கனவு காணுங்கள்!

பொங்கி வரும் கோபத்தை புஸ்வானமாக்க சில யோசனைகள்!

கவனத்தை கவனத்தோடு கையாளுங்கள்!

உணவை நன்றாக மென்று சாப்பிட வேண்டியதன் அவசியத்தை அறிந்துக் கொள்வோம்!

பேச்சுத் திணறல் காரணங்களும் அவற்றை எதிர்கொள்ளும் விதங்களும்!

SCROLL FOR NEXT