Kalki 2898 AD 
வெள்ளித்திரை

கோடியில் வசூலை அள்ளிய கல்கி படம்... ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா?

விஜி

பிரபாஸ் நடிப்பில் வெளியாகியுள்ள கல்கி 2898 AD திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நாக் அஸ்வின் இயக்கத்தில் சூப்பர் ஹீரோ படமாக உருவாகி வரும் கல்கி படத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமலஹாசன், தீபிகா படுகோன் ஆகியோர் நடித்துள்ளனர். இது சூப்பர் ஹீரோ படமாக அதிக பட்ஜட்டில் உருவாகியுள்ளது என்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

கலியுகத்தில் கிருஷ்ணன் அவதாரத்தைத் தழுவியும் இந்தப் படத்தை எடுத்திருப்பதாக செய்திகள் வந்தன. இப்படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன. முன்னதாக இப்படம் இந்த ஆண்டு மே மாதம் 9ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்தது. ஆனால் கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் தான் படத்தின் பாடல் காட்சிகளும் விட்டுப்போன சில காட்சிகளும் படம்பிடிக்கப்பட்டன. இந்தப் படப்பிடிப்பிற்காகப் படக்குழு இத்தாலி சென்று வந்தது. படப்பிடிப்பு ஒருபக்கமும் மறுபக்கம் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகளும் விறுவிறுப்பாக நடந்தன. இந்த படத்தின் வெளியீட்டுத் தேதி சமீபக்காலமாக பல காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டுக் கொண்டே இருந்தது.

ஒருவழியாக கடந்த ஜூன் 27ஆம் தேதி இந்த படம் உலகளவில் வெளியாகி வரவேற்பை பெற்றது. பல ட்விஸ்ட்களை கொண்ட இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. சுமார் 600 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ஹிட்டடித்தது என்றே சொல்லலாம். படத்தின் முதல் பாதி மெதுவாக செல்வதாக விமர்சனம் வந்தாலும், இரண்டாம் பாதியில் படம் பட்டாசாக இருப்பதாக விமர்சகர்கள் தெரிவித்தனர்.

கல்கி படம் வெளியான 11 நாட்களில் உலகம் முழுவதும் தற்போது ரூ.900 கோடியை வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனமாக வைஜெயந்தி மூவிஸ் அறிவித்துள்ளது. விரைவில் படம் ரூ.1,000 கோடி வசூலை எட்டும் என தெரிகிறது.

இந்த நிலையில், கல்கி படம் வெளியாகி 7 முதல் 8 வாரங்களுக்குப் பிறகு, ஆகஸ்ட் 15 ஆம் தேதி கல்கி OTT இல் ஸ்ட்ரீமிங் செய்யப்படும் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. கல்கி திரைப்படத்தின் தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னட பதிப்புகளுக்கான ஓடிடி ரீலிஸ் உரிமத்தை அமேசான் பிரம் பெற்றுள்ள நிலையில் இந்தி பதிப்பிற்கான உரிமையை நெட்பிளிக்ஸ் கைப்பற்றியுள்ளது.

இந்த சின்னஞ்சிறு காயில் ஒளிந்திருக்கும் சூப்பர் நன்மைகள் தெரியுமா?

குழந்தைகளுக்கு வளர்ச்சி மொழிக் கோளாறு ஏற்படுத்தும் சிக்கல்கள்!

முகத்துக்கு நீராவி பிடிங்க… கரும்புள்ளிகள் எல்லாம் காணாமல் போகும்! 

பார்ப்பதற்கும் கவனிப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை உணர்த்திய துரோணாச்சாரியார்!

வயதாகும் வேகத்தைக் குறைக்க விபரீத முடிவெடுத்த தொழிலதிபர்!

SCROLL FOR NEXT