Keerthy suresh with her lover 
வெள்ளித்திரை

15 வருட காதலரை கரம் பிடிக்கும் கீர்த்தி சுரேஷ்… விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

பாரதி

நடிகை கீர்த்தி சுரேஷின் திருமணம் பற்றிய அப்டேட் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்த கீர்த்தி சுரேஷ் பின் இளம் வயது வரை சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார். இதனையடுத்து 2016ம் ஆண்டு பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ரஜினிமுருகன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதன்பின்னர் விஜய், சூர்யா, ரஜினிகாந்த் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து மிகவும் பிரபலமானார்.

இதற்கிடையே பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்ததுடன், தேசிய விருதையும் வென்றார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் அதிகம் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இதனையடுத்து தொடர்ந்து கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருகிறார்.

இந்தநிலையில் அவருடைய திருமணம் பற்றிய செய்தி வெளியாகியிருக்கிறது. ஆண்டனி தட்டில் என்ற தனது நீண்ட நாள் காதலரை கரம் பிடிக்க உள்ளார் கீர்த்தி சுரேஷ். கேரள மாநிலம், கொச்சியைச் சேர்ந்த ஆண்டனி, தற்போது துபாயில் வசித்து தொழில் செய்து வருகிறார். இவருடன் கீர்த்தி தனது பள்ளிப் பருவத்தில் இருந்தே சுமார் 15 வருடங்களாக காதலித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

வருகின்ற டிசம்பர் 11 அல்லது 12 ஆகிய தேதிகளில் கோவாவில் இருவீட்டார் முன்னிலையில் திருமணம் செய்யவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இதுகுறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

அட்லீ இயக்கத்தில் வெளியான தெறி படத்தின் ஹிந்தி ரீமேக்கில் கீர்த்து சுரேஷ் நடித்து வருகிறார். இதன்மூலம் அவர் ஹிந்தி சினிமாவில் அறிமுகமாகிறார். அதேபோல், ‘ரிவால்வர் ரீட்டா’ என்ற படம் விரைவில் தமிழில் வெளியாக இருக்கிறது.

இப்போதுதான் நயன்தாராவின் திருமணம் குறித்தான டாக்குமென்ட்ரி ரிலீஸானது. ஆனால், திரையுலகில் ஓரிருவர் மட்டுமே அனைவரையும் அழைத்து ரசிகர்களின் கவனம்பெற்று திருமணம் செய்துக்கொள்கிறார்கள். ஆனால், பலர் யாருக்கும் தெரியாமல் இருவீட்டார்களின் முன்னிலையில் மட்டும் திருமணம் செய்துக்கொண்டு, அறிவிப்பை மட்டும் ரசிகர்களிடம் விடுகின்றனர். இதேபோல்தான் கீர்த்தி சுரேஷின் திருமணமும் நடைபெறும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

பிளாஸ்டிக் சர்ஜரியின் பிதாமகன் யார் தெரியுமா?

குதிகால் வலியைப் போக்க சில எளிய யோசனைகள்!

இலட்சியத்துக்கு தடையாகும் அலட்சியம்!

நிலவில் எரிமலைகளைக் கண்டுபிடித்த சீனா… எதிர்காலக் கனவு பலிக்குமா? 

தினமும் ஒரு கைப்பிடி வேகவைத்த வேர்க்கடலை சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?

SCROLL FOR NEXT