Kubera Rashmika Mandanna 
வெள்ளித்திரை

குபேரா படத்தில் ராஷ்மிகா கெட்டப் இதுதான்... வெளியானது வீடியோ!

விஜி

நடிகர் தனுஷின் 51 ஆவது திரைப்படமாக உருவாகி வரும் குபேரா படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

நடிகர் தனுஷின் நடிப்பில் சமீபத்தில் வெளியான கேப்டன் மில்லர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இயக்குநர் அருண் மாதீஸ்வரன் இயக்கத்தில் வெளிவந்து, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான இப்படமானது விமர்சன ரீதியாக எதிர்பார்த்த அளவு வெற்றிப் படமாக அமையவில்லை என்றாலும்கூட வசூல் ரீதியாக கேப்டன் மில்லர் வெற்றிப்படமாகவே அமைந்தது.

அதனைத் தொடர்ந்து தன்னுடைய அடுத்த திரைப்படத்தை ஒரு சிறந்த படைப்பாக அமைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், ‘ராயன்’ திரைப்படத்தை உருவாக்கி வருகின்றார் நடிகர் தனுஷ். நடிகர் தனுஷின் ஐம்பதாவது திரைப்படமாக உருவாகி வரும் ராயன் திரைப்படம் வரும் 26ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தனுஷ் தனது 51 ஆவது திரைப்படமான ‘குபேரா’ படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் வெளியாகும் இந்தப் படமானது தமிழ் மற்றும் தெலுங்கு என இவ்விருமொழியிலும் உருவாகி வருகிறது. குறிப்பாக தனுஷின் ‘வாத்தி’ திரைப்படம் தெலுங்கு ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் அதன்பிறகு மீண்டும் ஒரு நேரடி தெலுங்கு படத்தில் நடிக்கின்றார் தனுஷ். அதோடு இந்த படத்தில் இசையமைப்பாளராக தேசிய விருது பெற்ற ‘தேவி ஸ்ரீ பிரசாத்’ இணைந்துள்ளார். தனுஷுடன் இணைந்து நடிகை ரஷ்மிகா, நாகர்ஜுனா ஆகியோர் குபேரா திரைப்படத்தில் நடித்து வருகின்றனர்.

குபேரா படத்தில் தனுஷின் கதாப்பாத்திரம் மற்றும் தோற்றம் இரண்டுமே மிகவும் வித்யாசமாக இருப்பதால் கண்டிப்பாக இப்படமும் மிகப்பெரிய அளவில் எதிர்பார்பை ரசிகர்களின் மத்தியில் ஏற்படுத்தி இருக்கிறது. அதுமட்டுமின்றி இந்து கடவுளான குபேரர், செல்வ செழிப்பை அதிகரிக்கச்செய்யும் கடவுளாகவே விளங்குகிறார். எனவே பணத்தால் ஒருவரது வாழ்க்கை எப்படி மாறுகின்றது என்பதை சார்ந்து குபேரா திரைப்படத்தின் கதைகளம் அமைந்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ராஷ்மிகாவின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ராஷ்மிகா இளஞ்சிவப்பு நிற சல்வார் அணிந்து, ஒரு காட்டு பகுதியில் புதைத்து வைக்கப்பட்ட சூட்கேஸை இழுத்துச் செல்வதைப் போன்ற தோற்றம் உள்ளது. இதுகுறித்த வீடியோ ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

முன்னதாக, 'குபேரா'வில் இருந்து நடிகர் தனுஷ் மற்றும் 'கிங்' நாகார்ஜுனா அக்கினேனி ஆகியோரின் முதல் தோற்றமும் வெளியிடப்பட்டது, இது நாடு முழுவதும் பார்வையாளர்களிடமிருந்து உற்சாகமான வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. 'குபேரா'வில் தனுஷ், 'கிங்' நாகார்ஜுனா அக்கினேனி, ராஷ்மிகா மந்தனா மற்றும் ஜிம் சர்ப் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் சுனில் நரங் மற்றும் புஸ்குர் ராம் மோகன் ராவ் இணைந்து தயாரிக்கின்றனர். 'குபேரா' ஒரு பான்-இந்தியா பன்மொழி படம் ஆகும். இது தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் படமாக்கப்படுகிறது.

60 வயதுக்குப் பின்னர் நிம்மதியாக வாழ வேண்டுமா? இதை முதல்ல படிங்க!

உலகின் 5 நீளமான நதிகள்!

பயணம்; நான் ரசித்த அழகிய தாஜ்மஹால்!

அதிகப்படியான ஆயில் சருமத்தை கட்டுப்படுத்த சில தீர்வுகள்!

பாரம்பரிய மைசூர்பாக் மற்றும் மொறுமொறுப்பான ஓமப்பொடி!

SCROLL FOR NEXT