Lokesh Kanagaraj 
வெள்ளித்திரை

Lokesh Kanagaraj: 7 ஆண்டுகளில் 5 படங்கள்.. X தளத்தில் ட்ரெண்டாகும் படங்களின் ரேட்டிங்!

பாரதி

லோகேஷ் கனகராஜ் திரைத்துறையில் கால்பதித்து 7 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், இரண்டாம் நாளாக X தளத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளார்.

லோகேஷ் இயக்கிய மாநகரம் திரைப்படம் 2017ம் ஆண்டு மார்ச் 10ம் தேதி வெளியானது. நிறைய பேர் இந்தப்படம்தான் லோகேஷின் முதல் படம் என்றும், நேற்றுதான் லோகேஷ் திரைத்துறையில் கால்பதித்து 7 ஆண்டுகள் ஆனது என்றும் நினைக்கின்றனர். ஆனால் 2016ம் ஆண்டு மார்ச் 11ம் தேதி 'அவியல்' என்றப் படத்தின் மூலமே சினிமா துறையில் கால்பதித்தார். அவியல் படம் நான்கு குறும்படங்கள் சேர்ந்த படமாகும். அந்த நான்கு குறும்படங்களை ஆல்போன்ஸ் புத்திரன், ஷமீர் சுல்தான், மோஹித் மேஹ்ரா மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் இயக்கினார்கள்.

இதனையடுத்துதான் அடுத்த ஆண்டு 'மாநகரம்' படம் வெளியானது. 2019ம் ஆண்டு கைதி படத்தை கார்த்தி வைத்து ஒருநாள் இரவில் நடக்கும் கதையை

படமாக எடுத்தார். இப்படம்தான் திரைத்துறையில் லோகேஷின் திருப்புமுனையாக அமைந்தது. அடுத்ததாக 2021ம் ஆண்டு லோகேஷ் விஜய் வைத்து 'மாஸ்டர்' படம் இயக்கினார். இது வசூல் ரீதியாக பெரிய ஹிட் ஆனது. அதன்பின்னர் லோகேஷ் கமலஹாசனின் விக்ரம் மற்றும் விஜயின் லியோ படங்களை இயக்கினார்.

இயக்குனராக வெற்றிபெற்ற லோகேஷ் 2022ம், ஆண்டு மைக்கல் படத்தின் மூலம் தயாரிப்பாளராகக் களமிறங்கினார். அதன்பின்னர் சமீபத்தில் வெளியான அர்.ஜே.பாலஜி நடித்த சிங்கப்பூர் சலூன் படத்தில் கேமியோ ரோல் செய்து நடிப்பிலும் களமிறங்கினார்.

இதனையடுத்து ட்விட்டரில் இதுவரை லோகேஷ் எடுத்தப் படங்களின் ரேட்டிங்கை ரசிகர்கள் வெளியிட்டுள்ளனர். அந்தவகையில் மாநகரம் படம் 4/5 , கைதி 4.5/5, மாஸ்டர் 4/5, விக்ரம் – 4.5/5, லியோ- 3.5/5 ரேட்டிங் அமைந்துள்ளது.

லியோ படம் விமர்சன ரீதியாக நெகட்டிவ் கம்மென்ட்டுகள் வந்ததிலிருந்து லோகேஷ் அந்தக் கம்மென்ட்டுகளை ஏற்றுக்கொண்டு அடுத்த படங்களை மிகவும் கவனமாக இயக்கத் திட்டமிட்டுள்ளார்.

அந்தவகையில் தற்போது லோகேஷிடம் 5 படங்கள் கைவசம் உள்ளன. முதலில் கைதி படத்தின் பாகம் 2-ற்கானத் திட்டங்களை லோகேஷ் செய்து வருகிறார். அதேபோல் கமல், லோகேஷ் கூட்டணியில் மாபெரும் ஹிட்டான விக்ரம் படத்தின் பாகம் 2ஐ அடுத்து இயக்கவுள்ளார். அதனைத்தொடர்ந்து ரோலக்ஷ் கதாப்பாத்திரத்தின் தனிப்படம் மற்றும் சூர்யாவின் இரும்புக் கை மாயாவி படத்தை லோகேஷ் இயக்கவுள்ளார். இவயனைத்திற்கும் முதன்மையாக ரஜினி கூட்டணியில் அவரின் 171வது படம் என லோகேஷிக்கு ஐந்து படங்கள் கைவசம் உள்ளன.

முள்ளங்கி ஜூஸின் ஆரோக்கிய பலன் தெரிஞ்சா குடிக்காம விடவே மாட்டீங்க!

அன்றாட சிறு சிறு உடல் பிரச்னைகளைப் போக்கும் எளிய உணவு மருத்துவம்!

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால் இந்தியர்களுக்கு என்ன நன்மை? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT