Thalaivar 171 First Look
Thalaivar 171 First Look 
வெள்ளித்திரை

லோகேஷ் இயக்கும் தலைவர் 171 படத்தில் ரஜினி கெட்டப் இதுதான்... வெளியானது ஃபர்ஸ்ட் லுக்!

விஜி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 171 வது படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.

தலைவர் 171 மூலம் முதன்முறையாக ரஜினி - லோகேஷ் கூட்டணி இணைகிறது. இதனால் தலைவர் 171 படத்துக்கு மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகும் அனைத்தும் படமும் ஹிட்டாகி வருகிறது. இதுவரை விஜய், கமல் என பெரிய ஹீரோவை வைத்து படம் எடுத்து ஹிட்டடித்துள்ளார்.

முதல் படமான மாநகரமே இவருக்கு பெரிய வரவேற்பை அளித்தது. சமீபத்தில் விஜய் - லோகேஷின் கூட்டணியில் வெளியான லியோ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து படமெடுக்கவுள்ளார்.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தற்போது அடுத்தடுத்த படங்களில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். 71 வயதாகும் ரஜினிகாந்த் இன்றளவிலும் அயராது தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் நீண்ட இடைவேளைக்கு பிறகு ரஜினியின் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. பின் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி தற்போது ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார்.

தொடர்ந்து லோகேஷ் கூட்டணியில் இணைந்துள்ளார். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்க, அன்பறிவ் மாஸ்டர்ஸ் ஆக்‌ஷன் கோரியோகிராபி செய்கின்றனர். இந்த படத்தில் ரஜினியுடன் பகத் பாசில், அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் என நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. வேட்டையன் படத்தின் ஷூட்டிங் 70 சதவிகிதம் முடிந்துவிட்டதாக ரஜினிகாந்த் அண்மையில் செய்தியாளர்களிடம் கூறியது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் டீசர் தமிழ் புத்தாண்டு அன்று வெளியாகும் என்ற தகவல் உலா வருகிறது.

இந்த நிலையில், ரஜினியின் 171 வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார் என்ற அதிகாரபூர்வ தகவல் வெளியானது, மேலும், இந்த படத்திற்காக 4 முதல் 5 மாதங்களாக முன்தயாரிப்பு பணிகள் நடந்து வருவதாகவும், ஜுனில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அண்மையில் கூறியிருந்தார். தற்போது ரஜினியின் 171 வது படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரை  லோகேஷ் கனகராஜ் தனது X தளத்தில் பகிர்நதுள்ளார்.

ஜூலியஸ் சீஸர் நடத்திய போரில் இறந்தவரின் மண்டை ஓடு… சுவாரசிய தகவல்!

சிறுகதை - எதிர்வீட்டு ஜன்னல்!

வாராகி அம்மன் வழிபாடு எப்படி செய்ய வேண்டும்...தெரிஞ்சிக்கலாம் வாங்க!

Short Story - Trophy Triumph!

சுவையான 'மலாய் மட்டர் பன்னீர்' கிரேவி செய்யலாம் வாங்க!

SCROLL FOR NEXT