Mamooty 
வெள்ளித்திரை

மம்முட்டியின் Turbo படத்தின் ட்ரைலர் வெளியீடு… இணையத்தைக் கலக்கும் வீடியோ!

பாரதி

மம்முட்டி நடிப்பில் உருவான Turbo படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. ட்ரைலர் வெளியான 12 மணி நேரத்தில் 2 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சென்றுள்ளது.

சமீபத்தில் மம்முட்டி நடிப்பில் வெளியான பிரம்மயுகம் படம் விமர்சன ரீதியாக ஹிட்டானது. மலையாளத்தில் மட்டுமல்லாமல் இப்படம், தென்னிந்தியா முழுவதும் ஹிட் கொடுத்தது. குறிப்பாக, தமிழ்நாட்டில் பிரம்மயுகம் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. படம் முழுவதும் Black and white ல் எடுக்கப்பட்டது ஒரு ப்ளஸ் என்றால், மம்முட்டியின் அசுரத்தனமான நடிப்பு மற்றொரு பெரிய ப்ளஸாக அமைந்தது.

அந்தவகையில், 27 கோடிக்கு எடுக்கப்பட்ட பிரம்மயுகம் படம் 85 கோடி வரை வசூல் செய்தது. அதேபோல், பிரம்மயுகம் படம் வெளியாவதற்கு முன்னர் ஜோதிகாவுடன் இணைந்து மம்முட்டி நடித்த ‘காதல் தி கோர்’ படமும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனால் மம்முட்டி தொடர்ந்து அடுத்தடுத்தப் படங்களில் ஹிட் கொடுத்தார். மேலும் மம்முட்டியின் அடுத்தப் படத்திற்கு எதிர்பார்ப்புக் கூடியது.

அந்தநிலையில் ஏப்ரல் மாதம் மம்முட்டியின் அடுத்தப் படமான Turbo படத்தின் வெளியிட்டுத் தேதி அறிவிக்கப்பட்டது. வியாஸக் இயக்கியுள்ள இப்படத்தை மம்முட்டியின் தயாரிப்பு பேனர்தான் தயாரித்துள்ளது. இதற்கு முன்னர் வியாஸக் மற்றும் மம்முட்டி ஆகியோர் ‘போக்கிரி ராஜா’ மற்றும் ‘மதுரராஜா’ அகிய படங்களில் இணைந்து பணியாற்றினர்.

அதேபோல் இப்படத்தின் எழுத்தாளர் மானுவல் தாமஸுடன் மம்முட்டி 'ஆபிரகாம் ஓஸ்லர்' என்றப் படத்தில் இணைந்து நடித்தார். மேலும், கிறிஸ்டோ சேவியர் இசையமைத்துள்ள இந்தப் படத்தை துல்கர் சல்மானின் Wayfarer Films விநியோகம் செய்யவுள்ளது. மேலும், Turbo படத்தில் சுனில், அஞ்சனா ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்தநிலையில்தான் மம்முட்டியின் மிரட்டலான லுக்குடன் போஸ்டர் ஒன்றை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. Turbo படம் உலக முழுவதும் ஜூன் 13ம் தேதி வெளியாகும் என்று போஸ்டருடன் அறிவிக்கப்பட்டது.

மம்முட்டி தயாரிப்பு நிறுவனத்தின் ஐந்தாவது படமான Turbo, ஒரு காமெடி-ஆக்ஷன் படமாக பட்டையைக் கிளப்பும் என்றே ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

அந்தவகையில் நேற்று வெளியான Turbo படத்தின் ட்ரைலர் ஒரு செம்ம ஆக்ஷன் மூவி என்பதை உறுதி செய்துள்ளது. 72 வயதான மம்முட்டி வயதுக்கும் செயலுக்கும் சம்பதமே இல்லாததுபோல் சண்டைக் காட்சிகளில் பட்டையைக் கிளப்பியுள்ளார். இதனால் 12 மணி நேரத்திலேயே 2 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சென்றது Turbo. இதனையடுத்து X தளத்திலும் மம்முட்டி என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் உள்ளது.

முள்ளங்கி ஜூஸின் ஆரோக்கிய பலன் தெரிஞ்சா குடிக்காம விடவே மாட்டீங்க!

அன்றாட சிறு சிறு உடல் பிரச்னைகளைப் போக்கும் எளிய உணவு மருத்துவம்!

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால் இந்தியர்களுக்கு என்ன நன்மை? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT