Manjumel Boy's Guna Cave
Manjumel Boy's Guna Cave 
வெள்ளித்திரை

மஞ்சுமெல் பாய்ஸ் குணா குகைக்குப் பின் இவ்வளவு ரகசியங்கள் உள்ளனவா?

பாரதி

மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் குணா குகை என்றாலே பல பேர் பல கதைகள் கூறுகின்றனர். கொடைக்கானலில் உள்ள இந்த குணா குகை சில வருடங்களுக்கு முன்னர் தடை செய்யப்பட்டப் பகுதியாக அறிவிக்கப்பட்டது. அந்தவகையில் குணா குகையின் சில சுவாரசிய விஷயங்களைப் பற்றிப் பார்ப்போம்.

குணா குகை 1821ம் ஆண்டு பிரிட்டிஷ் அதிகாரி பி.எஸ்.வார்ட் என்பவரால் கண்டுப்பிடிக்கப்பட்டது. ஆனால் அதன்பின்னர் பல ஆண்டுக்காலம் அந்த குகைப் பற்றி யாருமே கண்டுக்கொள்ளவில்லை. பின்னர் 1990ம் ஆண்டுத்தான் குணா குகையின் இயற்கை அழகு மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது. 1992ம் ஆண்டு வரை அதாவது கமலஹாசனுடைய குணா படம் வெளியாவதற்கு முன்னர் வரை இந்தக் குகை The devil’s kitchen என்றுத்தான் அழைக்கப்பட்டது. அந்தப் படத்திற்குப் பின்னர்தான் அது குணா குகை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

The devil’s kitchen என்றுப் பெயர் வருவதற்கானக் காரணத்தை ஒரு புராணக் கதையில் கூறப்பட்டிருப்பதாக சிலர் கூறுகிறார்கள். அதாவது மகாபாரதத்தில் பாண்டவர்கள் வனவாசம் செய்தபோது அந்த இடத்தில் மறைந்துதான் உணவு செய்து சாப்பிட்டார்கள் என்பதால், இந்த kitchen என்ற பெயர் வந்ததாகவும் devil என்ற பெயர் ஏன் வந்தது என்று தெரியாத ஒரு மர்மமாகவே உள்ளது என்றும் கூறுகிறார்கள்.

Guna cave

என்னத்தான் இந்த குணா குகை அழகாக இருந்தாலும். இது ஒரு ஆபத்தான இடமாகவே கருதப்படுகிறது. ஏனெனில் இது கடல்மட்டத்திலிருந்து சுமார் 2230 மீட்டர் உயரம் கொண்டது. இந்த குகையைச் சுற்றி சோலா மரங்கள், புற்கள் போன்றவை அதிகம் காணப்படும். அதேபோல் மூன்று ராட்சஸ பாறைகளுக்கு இடையில் தான் இந்த குகை உள்ளது. இரண்டு பாறைகள் ஒட்டுக்கொண்டிருக்கும், அதிலிருந்து மூன்றாவது பாறை செங்குத்தாக இருப்பது போல அமைந்திருக்கும். ஆகையால் இது பிரம்மிக்க வைக்கும், அதேசமயம் பயமூட்டும் ஒரு குகையாக உள்ளது.

தடைசெய்யப்பட்ட முன்பு வரை ஏராளமான மக்கள் இங்கு சுற்றிப்பார்க்க செல்வார்கள். ஆனால் இப்போது இந்த குகையைச் சுற்றி 100 மீட்டர் உயர கம்பி வேலி எழுப்பியுள்ளனர்.

அதேபோல் இந்தக் குகையில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் வரைப் பழங்குடி மக்கள் வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

Guna cave

இவையனைத்தையும் விட ஒரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால், 18ம் நூற்றாண்டில் அந்த பிரிட்டிஷ் அதிகாரி குணா குகையின் வெளியிலிருந்துப் பார்க்கும்போது உள்ளிருந்துத் தொடர்ச்சியாக நிறைய புகை வந்துக்கொண்டே இருந்தது என்று கூறினாராம். அதனால்தான் அடுத்த சில காலங்களுக்கு யாருமே அந்தப்பக்கம் செல்லவில்லை. அதேபோல் The devil kitchen என்று பெயர் வந்ததிற்கு இன்னொரு முக்கிய காரணம் உள்ளது என்று வேறு சிலர் கூறுகின்றனர்.

அந்த குகையில் பேய்கள் இருப்பதாகவும், அந்த பேய்கள் மனிதர்களைப் பார்த்தால் கொன்று சமைத்து சாப்பிடுகின்றன என்றும் நம்பப்படுகிறது. இது ஒரு கட்டுக்கதை என்று அனைவரும் சொல்லிக்கொண்டிருந்த நேரத்தில் தான், குகையின் உள்ளே நெடுந்தூரம் சென்ற 12 இளைஞர்கள் மர்மமான முறையில் குணா குகையில் இறந்துக் கிடந்தனர். அதிலிருந்துதான் யாரும் குகைக்கே செல்லக்கூடாது என்று அறிவிக்கப்பட்டது.

அங்குள்ள இருட்டு இடங்களும், அளவுக்கதிகமான வௌவால்களின் கூட்டமும்தான் அந்த இடத்தைப் பேய்கள் வாழும் இடமாகக் கருத முதற்காரணமாக அமைகிறது.

அப்படிதான் நண்பர்களுடன் குணா குகைக்கு சென்று, உண்மையிலேயே காணாமல் போய் மீட்கப்பட்ட இளைஞரின் கதையைத்தான் மஞ்சுமெல் பாய்ஸின் கதைக்களமாக அமைத்துள்ளனர். இப்படம் தமிழிலும் மலையாளத்திலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. கமல் முதல் உதயநிதி ஸ்டாலின் வரைப் படக்குழுவைச் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

கொன்றை பூவின் ஆரோக்கிய மகத்துவம் தெரியுமா?

உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?

Remote Work: தொழில்நுட்பமும், தொலைதூர வேலைகளும்! இதுதான் எதிர்காலமா? 

18 முறை படையெடுத்தும் 6 முறை தரைமட்டமாகியும் மீண்டெழுந்த ஆலயம்!

Managing Debts: சாமானியர்களுக்கான கடன் நிர்வாக யுக்திகள்! 

SCROLL FOR NEXT