Vijay and Aiswarya rai 
வெள்ளித்திரை

தளபதியுடன் நடிக்க மறுத்த உலக அழகி! காரணம் இதுதானாம்!

பாரதி

தளபதி விஜயுடனே உலக அழகி ஐஸ்வர்யா ராய் நடிக்க மறுத்திவிட்டதாகவும், அதற்கு அவர் சொன்ன காரணத்தையும் ஒரு பத்திரிக்கையாளர் ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

உலக அழகி பட்டத்தை வென்ற ஐஸ்வர்யா ராய், சினிமா துறையில் அறிமுகமானார். முதன்முதலில் தமிழில் 1997ம் ஆண்டு வெளியான இருவர் படத்தின்மூலம் சினிமா துறையில் அறிமுகமானார். அடுத்து தமிழில் சங்கர் இயக்கத்தில் ஜீன்ஸ் படத்தில் நடித்த அவர், தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

அப்படியே ஹிந்தி, தெலுங்கு, வங்காளம், ஆங்கிலம் என பல மொழிகளில் நடிக்க ஆரம்பித்தார். அதன்பின்னர் தமிழில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன் ஆகிய படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார். கடைசியாக இவர் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்தார். இப்படத்தின் மூலம் ராவணன் ஜோடியை மீண்டும் திரையில் ரசிகர்கள் பார்த்து மகிழ்ந்தனர்.

சமீபக்காலமாக இவரது உடல் எடை அதிகரித்தது. இதனால், பலர் அவரை உருவக் கேலி செய்தனர். இதனையடுத்து அவர், குழந்தைப் பிறந்தால் குண்டாவது சகஜம்தான் நான் இதுகுறித்து கவலைப்படவில்லை. என்று பேசினார்.

இந்தநிலையில் ராஜீவ் மேனன் இயக்கத்தில் வெளியான கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்திற்கு பின்னர், அடுத்த படத்தில் விஜயுடன் நடிப்பார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது நடக்கவில்லை.

விஜய் நடிப்பில் 2001ம் ஆண்டு வெளியான தமிழன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க முதலில் ஐஸ்வர்யா ராயிடமே பேசப்பட்டதாம். ஆனால், அவர் நடிக்க மறுத்துவிட்ட காரணத்தினாலேயே பிரியங்கா சோப்ரா நடித்தார்.

இதுகுறித்து பிரபல சினிமா பத்திரிக்கையாளர் ஒருவர் பேசுகையில், “தமிழன் படத்தில் நடிக்க முதலில் ஐஸ்வர்யா ராயிடமே பேசப்பட்டது. ஆனால், அந்தப் படத்தில் நடிக்க மறுத்துவிட்டார்.  இதுகுறித்து ஐஸ்வர்யா ராய் என்ன சொன்னார் என்றால், விஜயுடன் நான் நடிக்க மாட்டேன், அவர் என்னைவிட வயதில் சின்ன பையன் அதனால், எங்கள் ஜோடி பொருத்தம் நன்றாக இருக்காது என்று அவர் சொன்னார். “ என்று பத்திரிக்கையாளர் பேசினார்.

உலகில் மின்சாரம் குறைவாக பயன்படுத்தும் நாடுகள்!

குழந்தைகளுக்கு OCD இருப்பதை உணர்த்தும் 6 அறிகுறிகள்! 

எல்லோரும் மயங்கும் எல்லோரா குகைகள்!

குறைந்த அளவிலான போதைப்பொருள் பயன்பாடு உள்ள நாடுகள்!

உச்சக்கட்டத்தில் போர்… ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தளபதியை கொன்ற இஸ்ரேல்!

SCROLL FOR NEXT