வெள்ளித்திரை

நடிகர் விஜய் வைத்த செடிக்கு, தோனி தண்ணீர் ஊற்றும் படம்: ஒரே பதிவில் 5 லட்சம் லைக்ஸ் பெற்று சாதனை!

கல்கி

நடிகர் விஜய் நடித்து வெளியாகவுள்ள ''பீஸ்ட்'' திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ள நிலையில், விஜயை ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அரிதாகவே பார்க்க முடிகிறது. ஆனால், ஒரேயொரு டிவீட்டில் லட்சக்கணக்கான லைக்ஸ்களை அள்ளி விடுவார்.

இந்நிலையில் விஜய் சமீபத்தில் வெளியிட்ட ஒரு ட்வீட், 5 லட்சம் லைக்குகளைப் பெற்று இந்திய அளவில் இந்த பெருமையை பெற்ற முதல் நடிகர் என்ற சிறப்பு கிடைக்கப் பெற்றுள்ளது. 'கிரீன் இந்தியா' மூவ்மெண்டிற்காக தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு மரம் நடுவதற்காக நடிகர் விஜய்யை கடந்த ஆண்டில் டேக் செய்திருந்தார். இதையொட்டி நடிகர் விஜய் தன்னுடைய தோட்டத்தில் மரக்கன்றை நட்டு, அதற்கு கிரிக்கெட் வீரர் தோனி தண்ணீர் ஊற்றுவது போன்ற புகைப்படங்களை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

இந்தப் புகைப்படங்கள் அவரது ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன. தொடர்ந்து வைரலான இந்த புகைப்படங்கள் தற்போது 5 லட்சம் லைக்ஸ்களை பெற்றுள்ளன. இந்திய அளவில் ஒரு ட்வீட்டிற்கு 5 லட்சம் லைக்ஸ்களை பெற்ற ஒரே நடிகர் என்ற பெருமையும் விஜய்க்கு கிடைத்துள்ளது.

ஊட்டி, கொடைக்கானல் செல்வதற்கு இன்று முதல் இ பாஸ் எடுக்கலாம்!

சுய அன்பு தரும் 9 வித நன்மைகள் பற்றி தெரியுமா?

கோடைக்கு குளிர்ச்சி தரும் உணவு வகைகள்!

ஐஸ்கிரீம் சாப்பிடும்போது எப்படி சாப்பிட வேண்டும் என்று தெரியுமா?

தேசிய கீதம் தந்த ரவீந்திரநாத் தாகூர் - தெரிந்ததும் தெரியாததும்!

SCROLL FOR NEXT