Shalini 
வெள்ளித்திரை

முடிந்தது ஆபரேஷன்... மகனுடன் ஷாலினி... வைரலாகும் போட்டோ!

விஜி

நடிகை ஷாலினி மருத்துவமனையில் அட்மிட் ஆன புகைப்படம் இணையத்தில் வைரலான நிலையில், தற்போது அறுவை சிகிச்சை முடிந்த பிறகு மகனுடன் இருக்கும் போட்டோ கவனம் பெற்றுள்ளது.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக ரஜினிகாந்த் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர் தான் ஷாலினி. இவர் மட்டும் இன்றி இவரின் சகோதரர் ரிச்சர்ட், தங்கை ஷாமிலி ஆகிய அனைவருமே குழந்தையாக நடிப்பில் கால் பதித்து அசத்தினர். ஷாலினி தமிழ் படங்கள் மட்டும் இன்றி ஏராளமான மலையாள படங்கள், தெலுங்கு, கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகளில், குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். அதே போல், பருவ வயதை எட்டிய பின்னர், ஷாலினி ஹீரோயினாக மலையாளத்தில் அறிமுகமானார்.

தமிழில் இயக்குனர் பாசில் இயக்கத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக ஷாலினி நடித்த மினி என்கிற கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் இவருக்கு வரவேற்பை பெற்று தந்தது. தன்னுடைய முதல் படத்திலேயே வெற்றி பட நாயகியாக அறியப்பட்ட ஷாலினி, இதை தொடர்ந்து அஜித்துடன் அமர்க்களம், மாதவனுக்கு ஜோடியாக அலைபாயுதே, பிரஷாந்துடன் பிரியாத வரம் வேண்டும் போன்ற சில படங்களில் மட்டுமே நடித்தார். முன்னணி நடிகையாக இருக்கும் போதே தல அஜித்துடன் ஏற்பட்ட காதலால் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். திருமணத்திற்கு பின்னர் திரையுலகில் இருந்து முழுமையாக விலகிய ஷாலினி, சமூக வலைத்தளங்களில் கூட பல வருடங்களாக தலை காட்டாமல் இருந்த நிலையில், கடந்த இரண்டு வருடங்களாக தான் இன்ஸ்டாகிராமில் கணக்கு துவங்கி அதன் மூலம் தன்னுடைய குடும்பம் குறித்த சில புகைப்படங்களை பகிர்ந்து கொள்கிறார்.

இப்போது அஜித் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். 6 மாதங்களுக்கு முன்பு துவங்கிய இப்படத்தின் தயாரிப்பு இழுத்து கொண்டே போனது. ஒருவழியாக படப்பிடிப்பு கடைசி கட்டத்தை எட்டி இருக்கிறது. இந்நிலையில்தான், அஜித் படப்பிடிப்புக்காக அசர்பைசான் நாட்டில் இருந்தபோது இந்த மாதத்தின் தொடக்கத்தில் ஷாலினிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

மருத்துவமனையில் படுக்கையில் இருக்கும் ஷாலினியின் கையை பிடித்தபடி அஜித் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை ஷாலினியே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ‘உன்னை எப்போதும் நேசிக்கிறேன்’ என கேப்ஷன் கொடுத்து உருகி இருக்கிறார். ஷாலினி தற்போது அறுவை சிகிச்சைக்கு பிறகு ஓய்வில் இருக்கிறார்.

இந்த நிலையில், தன்னுடைய மகன், தனக்கு நெற்றியில் முத்தமிட்டு அன்பை வெளிப்படுத்தும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT