Oscar winners 
வெள்ளித்திரை

Oscar 2024: விருதுகளை அள்ளிச் சென்ற Oppenheimer மற்றும் Poorthings படங்கள்!

பாரதி

2023ம் ஆண்டிற்கான ஆஸ்கார் விருதில் வெற்றிபெற்ற படங்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் Oppenheimer மற்றும் Poorthings படங்கள் விருதுகளை வாங்கிக் குவித்துள்ளன.

ஆஸ்கார் விருதுக்காக Oppenheimer படம் 13 விருதுகளுக்கும், Poor things படம் 11 விருதுகளுக்கும், killers of the flower moon 10 விருதுகளுக்கும், Barbie 8 விருதுகளுக்கும், Maestro 7 விருதுகளுக்கும் தேர்வாகியிருந்தன. இந்த ஆஸ்காரில் இயக்குனருக்கான விருதை இரண்டுப் பெரிய படங்களுக்கான இயக்குனர்கள் கிறிஸ்டோபர் நோலன் மற்றும் மார்ட்டின் ஸ்கோர்ஸி இருவரில் யார் வெற்றிபெறுவார் என்ற எதிர்பார்ப்புக் கூடி இருந்தது. அதேபோல் Oppenheimer மற்றும் Killers of the flower moon ஆகிய படங்களும் போட்டிப் போட்டுக் கொண்டு இருந்தன.

இதன்மூலம் சிறந்த இயக்குனருக்கான விருதை கிறிஸ்டோபர் நோலன் தட்டிச் சென்றுள்ளார். இது அவரின் முதல் ஆஸ்கார் விருதாகும். என்னத்தான் மார்ட்டின் ஸ்கார்செஸி இந்த முறை பெற்றிபெறவில்லை என்றாலும் ஆஸ்காருக்கு அதிகமுறை பரிந்துரைக்கப்பட்ட இயக்குனர் என்றப் பெருமையை சேர்த்தார். அவர் இதுவரை 14 முறை ஆஸ்கார் விருதுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இவர் கடைசியாக The Departed என்ற திரைப்படத்திற்காக ஆஸ்கார் விருதை வென்றார்.

அந்தவகையில் சிறந்த நடிகைக்கான விருதை எம்மா ஸ்டோன் ( Poor things ) மற்றும் சிறந்த நடிகருக்கான விருதை கிலியன் மர்பி ( Oppenheimer ) ஆகியோர் தட்டிச் சென்றனர். ஒட்டுமொத்தமாக Oppenheimer படம் 7 விருதுகளையும் Poor things படம் 4 விருதுகளையும் வாங்கியுள்ளன.

மேலும்,

சிறந்தத் திரைப்படம் – Oppenheimer

சிறந்தத் திரைக்கதை – Anatomy of a fall – Justine Triet and Arthur Harari

சிறந்த ஒளிப்பதிவு – Oppenheimer

சிறந்தப் படத்தொகுப்பு – Jennifer Lame ( Oppenheimer)

சிறந்தத் துணை நடிகை – Da’vine Joy Randolph (The Holdovers)

சிறந்தத் துணை நடிகர் – Robert Downey Jr. ( Oppenheimer)

சிறந்தப் பாடல் – “ What was I made for?” ( Barbie)

சிறந்தப் பிண்ணனி இசை – Ludwig Goransson ( OPPenheimer)

சிறந்த ஆவணப்படம் – 20 Days in mariyupol

சிறந்த ஆவணக் குறும்படம்- The Last repair shop

Best international Feature Film – The zone of interest ( UK )

Best Animated Feature film – the boy and the heron

Best Animated short film – War is over

Best production Designer – Poor things

Best Sound – the zone of interest – Tarn Willers, Johnnie Burn

Best Visual Effects – Godzilla Minus One – Takashi yamazaki, Kiyoko Shibuya, Maski Takhashi and Tatsuji Nojima.

Best Adapted Screenplay – Cord Jefferson ( American Fiction )

Best live Action short film – The wonderful story of Henry sugar – Wes Anderson and Steven Rales

Best makeup and hairstyling – Nadia Satcey, Mark Coulier and Josh Weston( Poor things )

Best Costume Design – Holly Waddington ( Poor things ).

இந்தப் படங்கள் ஆஸ்கார் விருதுகளை வாங்கியுள்ளன.

பிக்கி உண்டியலின் வரலாறு தெரியுமா?

வேகமாகச் சுழலும் இறந்த நியூட்ரான் நட்சத்திரத்தை கண்டறிந்த விஞ்ஞானிகள்! 

இன்சுலின் சுரப்பை இயற்கையாக சீராக்க உதவும் எளிய உணவுகள்!

உடலில் மருக்கள் இருந்தால் சாதாரணமாக நினைக்காதீங்க… ஜாக்கிரதை! 

கனக விநாயகர் கணக்கு விநாயகர் ஆன கதை தெரியுமா?

SCROLL FOR NEXT