Pakistan Movie  
வெள்ளித்திரை

இந்தியாவில் வெளியாகப் போகும் பாகிஸ்தான் திரைப்படம்! எப்போ தெரியுமா?

ரா.வ.பாலகிருஷ்ணன்

இந்தியாவில் வெளிநாட்டு படங்கள் அவ்வப்போது வெளியிடப்படும். இந்த வரிசையில் ஹாலிவுட் படங்கள் தான் அதிகம். இந்நிலையில் தற்போது பாகிஸ்தான் திரைப்படம் ஒன்று இந்தியாவில் வெளியாக இருக்கிறது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இப்போது காண்போம்.

இந்தியத் திரையரங்குகளில் பாகிஸ்தானைச் சேர்ந்த நடிகர்களின் திரைப்படங்கள் வெகு அரிதாகவே வெளியாகும். கடந்த 2016 ஆம் ஆண்டில் நடந்த உரித் தாக்குதல் சம்பவத்திற்குப் பின்னர், பாகிஸ்தான் நடிகர்கள் நடித்திருக்கும் திரைப்படங்களை இந்தியாவில் வெளியிடத் தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக கடந்த 8 ஆண்டுகளாக பாகிஸ்தான் திரைப்படங்கள் இந்தியத் திரையரங்குகளில் வெளியிடப்படாமல் இருந்தன. இந்நிலையில் தற்போது பாகிஸ்தான் நடிகர்கள் அங்கம் வகிக்கும் “தி லெஜண்ட் ஆஃப் மௌலா ஜாட்” திரைப்படம் விரைவில் இந்தியாவில் திரையிடப்பட இருக்கிறது.

தி லெஜண்ட் ஆஃப் மௌலா ஜாட் திரைப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டில் பஞ்சாபி மொழியில் வெளியாகி இருந்தது. அச்சமயத்தில் இத்திரைப்படம் கிட்டத்தட்ட 14 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்து பாக்ஸ் ஆபிஸை கலக்கியது. மிகப்பெரிய வெற்றிப் படமாக உருவெடுத்ததால், தற்போது இந்தியாவில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். இதன்படி வருகின்ற அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் இத்திரைப்படம் வெளியாக இருக்கிறது. இதுகுறித்த அறிவிப்புகளை இப்படத்தில் நடித்த நடிகர்கள் சமூக வலைத்தளங்களில் தெரிவித்துள்ளனர்.

உலக அளவில் பல நாடுகளில் வெளியாகி வசூலைக் குவித்த இத்திரைப்படம், தற்போது இந்தியாவில் வெளியாக இருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளன. 8 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் வெளியாகும் முதல் பாகிஸ்தானிய படம் இது என்மதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகள் நிலவுகின்றன. இதில் ஆச்சரியம் என்னவென்றால் இப்படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் ஆகியும், இன்னமும் பாகிஸ்தான் திரையரங்குகளில் கூட்டம் நிரம்பி வழிகிறதாம்.

இன்றைய காலகட்டத்தில் ஒரு படம் ஒரு வாரத்திற்கு தாக்குப் பிடிப்பதே பெரிய விஷயமாக உள்ளது. ஏனெனில் ஒரு வார இடைவெளியிலேயே அடுத்தடுத்த படங்கள் திரைக்கு வர வரிசையில் காத்து நிற்கின்றன. இப்படி இருக்கையில், பாகிஸ்தானில் இப்படத்திற்கான வரவேற்பு அபரிமிதமாக உள்ளதைக் கண்டால், அப்படி என்ன தான் இருக்கிறது இந்தப் படத்தில் என்று எண்ணத் தோன்றுகிறது. எதிரெதிர் துருவங்களாக இருக்கும் இந்தியா பாகிஸ்தான் இடையே சினிமாவின் மூலம் ஒரு நல்ல உறவு இருப்பதை இந்தத் திரைப்பட வெளியீடு காட்டுகிறது.

இந்திய வெளியீடு குறித்து இப்படத்தின் இயக்குநர் பிலால் கூறுகையில், “அக்டோபர் 2 இல் பஞ்சாபில் வெளியாக இருக்கும் தி லெஜண்ட் ஆஃப் மௌலா ஜாட் படத்தின் காதல் காட்சிகள் அனைவருக்கும் நிச்சயமாக பிடிக்கும். இந்திய மக்கள் இந்தத் தொழிலாளியின் காதல் அனுபவத்தைப் பார்க்க இருக்கின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.

இத்திரைப்படத்தின் நடிகர் ஃபவத் கான் மற்றும் நடிகை மஹிரா கான் ஆகியோரும் இந்தியாவில் வெளியாவதை சமூக வலைத்தளங்களில் தெரிவித்துள்ளனர். இவர்கள் இருவரும் ஏற்கனவே இந்தியப் படங்களில் நடித்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இது பெண்களுக்கு மட்டுமானதல்ல... ஒவ்வொரு ஆணும்கூட தெரிஞ்சுக்கணும்!

நைனாமலை பெருமாளை அறிவீர்களா?

உணவு அருந்திய பின் இனிப்பு சாப்பிடுவது சரியா? 

சிறுகதை – முகம்!

வீடுகளின் அடையாளம் BHK குறியீட்டு என்பது தெரியும்... 1RK என்றால் என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT