வி.ஏ.துரை
வி.ஏ.துரை 
வெள்ளித்திரை

பிதாமகன் தயாரிப்பாளர் காலமானார்... திரைதுறையினர் அதிர்ச்சி!

விஜி

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் வி.ஏ.துரை உடல்நலக் குறைவால் காலமானார்.

என்னம்மா கண்ணு, பிதாமகன், லூட்டி, கஜேந்திரா, விவரமான ஆளு, லவ்லி உள்ளிட்ட படங்களை தயாரித்தவர் வி.ஏ.துரை. ரஜினி நடித்த படங்களில் உதவி, இணை இயக்குநராக பணியாற்றியதுடன் ‘பாபா’ படத்தில் நிர்வாகத் தயாரிப்பாளராகவும் இருந்தார்.

கடந்த சில ஆண்டுகளாக நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்த வி.ஏ. துரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு அன்றாட மருத்துவ செலவுகளுக்கே பணமில்லாமல் தவித்து வருவதாக காணொலி வெளியிட்டு உதவி கோரினார். அவருக்கு சூர்யா, கருணாஸ் உள்ளிட்ட நடிகர்கள் நிதியுதவி செய்தனர்.

நீரிழிவு நோய் பாதிப்பு அதிகரித்ததால் அண்மையில் அறுவை சிகிச்சை மூலம் அவரது ஒரு கால் அகற்றப்பட்டது. இந்நிலையில் வி.ஏ.துரை அவரது 69 வயதில் நேற்று இரவு அவரது வீட்டில் காலமானார். வி.ஏ.துரையின் மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு காலத்தில் பிதாமகன் போன்ற சூப்பர் படங்களை தயாரித்து வந்த நிலையில், தற்போது வறுமையின் பிடியில் சிக்கி உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.இவரின் உடல் அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

தந்தத்துக்கு நிகரான கொம்புகளைக் கொண்ட காண்டாமிருகங்கள்!

ஒரு நபரை முதல்முறை சந்திக்கப் போகும்போது பின்பற்ற வேண்டிய விஷயங்கள்!

ஆண்கள் பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா? 

ஒரே நாளில் மூன்று கோலத்தில் காட்சி தரும் அதிசய முருகன் கோயில்!

சிறுகதை - முகம் மாறு தோற்றப் பிழை!

SCROLL FOR NEXT