Ilayaraja - Premji
Ilayaraja - Premji 
வெள்ளித்திரை

இளையராஜாவை நேரில் சந்தித்து ஆசிபெற்ற பிரேம்ஜி - இந்து... வைரலாகும் போட்டோ!

விஜி

நடிகர் பிரேம்ஜி திருமணம் முடிந்த நிலையில் பெரியப்பாவான இளையராஜாவை நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.

பிரபல இசையமைப்பாளரும், இயக்குநருமான கங்கை அமரனின் மகன் பிரேம்ஜி, சிம்பு இயக்கி நடித்த வல்லவன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார். இதனைத் தொடர்ந்து சென்னை 28 படத்தில் காமெடி நகராக நடித்து பிரபலமானார். தொடர்ந்து சத்தம் போடாதே, சந்தோஷ் சுப்ரமணியம், சத்யம், ஒன்பதுல குரு, சேட்டை, நாரதன், சிம்பா என அடுத்தடுத்து பல படங்களில் நடித்து அசத்தியிருப்பார். பல படங்களில் நடித்திருந்தாலும் தனது சகோதரர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான படங்களே இவருக்கு அதிக பெயர் பெற்று தந்தது.

அதாவது வெங்கட் பிரபுவின் சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி, மாசு என்கிற மாசிலாமணி உள்ளிட்ட படங்கள் பிரேம்ஜிக்கு மிகவும் திருப்புமுனையாக அமைந்தது. இதனால் தனது சகோதரர் இயக்கும் படத்தில் மட்டுமே அதிகளவு நடித்துவருகிறார். தற்போத் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 68 படமான GOAT படத்திலும் நடித்து வருகிறார். சமீபத்தில் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு படத்திலும் நடித்து அசத்தியிருப்பார்.

இவருக்கு கடந்த 10ஆம் தேதி திருத்தணி முருகன் கோயிலில் இந்து என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இருப்பினும் பிரேம்ஜியின் பெரியப்பா இளையராஜாவும் அவரது மகன் யுவன் சங்கர் ராஜாவும் திருமணத்தில் கலந்துகொள்ளவில்லை. இது இணையத்தில் பேசு பொருள் ஆனது.

கங்கை அமரன் உடன் இளையராஜா சண்டை போட்டதால் அவர் பிரேம்ஜி திருமணத்தில் கலந்துகொள்ளவில்லை என்றெல்லாம் செய்திகள் உலா வந்தன. இந்த நிலையில், இந்த சர்ச்சைகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக திருமணம் முடிந்த கையோடு இளையராஜாவை நேரில் சந்தித்து ஆசி பெற்றனர். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கேன்சர் நோய்க்கு மிகச் சிறந்த தடுப்பு மருந்தாகும் கேக் பழம்!

இடையில் அரைஞாண் கயிறு கட்டும் ரகசியம் தெரியுமா?

மதுரையின் எல்லையில் அமர்ந்த மடப்புரத்து காளியின் கதை தெரியுமா?

நீங்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்கிறீர்களா? போச்சு! 

காலைப் பொழுதை சந்தோஷமாக மாற்றும் சத்தான 5 வகை உணவுகள்!

SCROLL FOR NEXT