இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் லிங்கா படம் குறித்து பேசுகையில், இப்படத்தில் வரும் சில காட்சிகளை ரஜினிகாந்த் மாத்திவிட்டார், அது எங்களுக்குப் பிடிக்கவே இல்லை என்றார்.
டாப் ஹிட் படங்களைத் தந்த முக்கியமான இயக்குநர்களில் கே.எஸ்.ரவிக்குமாரும் ஒருவர். இவர் 1990ம் ஆண்டு புரியாத புதிர் என்ற படத்தை இயக்கியதன் மூலம் சினிமா துறையில் அறிமுகமானார். அதன்பின்னர் நாட்டாமை, முத்து, அவ்வை சண்முகி, படையப்பா, மின்சார கண்ணா, சமுத்திரம், பஞ்சத்தந்திரம், தசாவதாரம், ஆதவன் போன்ற ஹிட் படங்களை இயக்கினார்.
இவர் ரஜினிகாந்தை வைத்து பல படங்களை இயக்கினார். கடைசியாக ரஜினி வைத்து இவர் இயக்கிய படம்தான் லிங்கா.
லிங்கா வெளியான நேரத்தில் ரஜினிக்கு தொடர்ந்து படங்கள் ஃப்லாப் ஆகின. அப்போது அவரால் கம்பேக் கொடுக்க முடியாத நிலை இருந்தது. லிங்கா, காலா, கபாலி, பேட்ட, தர்பார், கோச்சடையான் என எத்தனை படங்கள் வந்தாலும், அவருடைய பழைய ஃபார்முக்கு வர முடியாத சூழல் இருந்து வந்தது.
அண்ணாத்தே படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை தாங்கி நின்றது. ஆனால், அந்தப் படமும் எதிர்பார்த்த அளவு இல்லை. பின்னர் ஜெயிலர் படம் தான் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது. அந்தவகையில் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள வேட்டையன் படத்திற்கு ரசிகர்கள் நல்ல விமர்சனங்களைக் கொடுத்து வருகின்றனர்.
அந்தவகையில் லிங்கா படம் குறித்து கே.எஸ்.ரவிக்குமார் பேசுகையில், “லிங்கா பட க்ளைமக்ஸ் வேற, அந்த படத்துல பலூன் சீன் கிடையாது. நான் யோசிச்சு வச்ச கதையை ரஜினிகாந்த் மாத்திட்டாரு. எங்க யாருக்குமே அது புடிக்கல. அவர் தலையிட்டதால வேற வழி இல்லாம மாத்த வேண்டியதா ஆச்சு.” என்று பேசினார்.
இதுமாதிரி இயக்குநர்களுக்கு நடந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்டிருப்போம். ஆனால், அதுக்காக முக்கியமான இடத்துல (க்ளைமக்ஸ்) கை வைக்கிறதுலாம் ரொம்ப மோசம்பா… அனுபவ இயக்குநர்களுக்கே இப்படினா… அறிமுக இயக்குநர்களுக்கெல்லாம்…!?