Ghilli movie Re-Release.  
வெள்ளித்திரை

Re-Release ஆகும் கில்லி திரைப்படம்.. X தளத்தில் வைரலாகும் போஸ்டர்!

பாரதி

பல பழைய படங்கள் சமீபகாலமாக ரீரிலீஸாகி வசூலை குவித்துக்கொண்டு வருகிறது. அந்தவகையில் பலரும் எதிர்பார்த்த 'கில்லி' திரைப்படம் வரும் ஏப்ரல் 17ம் தேதி மீண்டும் திரைக்கு வரவுள்ளதாக அறிவிப்பு வெளியாகிவுள்ளது.

முன்னதாக பழைய பல திரைப்படங்களைத் திரையரங்கில் சென்று பார்க்காமல் அதை நினைத்து பலர் வருத்தப்பட்டிருக்கிறார்கள். இப்போது அந்த வருத்தத்தையெல்லாம் போக்கும்விதமாக பழைய படங்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக ரீரிலீஸ் செய்து வருகின்றனர். 'விண்ணைத் தாண்டி வருவாயா', 'வாரணம் ஆயிரம்' எனப் பல படங்கள் ரீரிலீஸ் ஆனதிலிருந்து, திரையரங்குகளின் ஓனர்களுக்கும் ஒரு நம்பிக்கைப் பிறந்தது.

ஆம்! ரீரிலீஸ் செய்யப்பட்ட ஒவ்வொருமுறையும் கூட்டம் அலைமோதிக்கொண்டு வந்தது. இதனால் அடுத்தடுத்து பழைய படங்களையே திரையரங்குகளில் திரையிட்ட வண்ணம் உள்ளனர். இப்போதெல்லாம் புதுப் படங்களை விட பழைய படங்களுக்கே ரசிகர்கள் கூட்டம் போட்டிப் போட்டுக் கொண்டு வருகின்றது. அந்தவகையில் சென்ற வாரம் 'வாலி', 'சிவா மனசுல சக்தி' போன்ற படங்கள் ரீரிலீஸ் செய்யப்பட்டன. அதேபோல் 'மின்சாரக் கனவு', 'காதலுக்கு மரியாதை', 'திருமலை' போன்ற படங்களும் ரீரிலீஸ் செய்யப்பட உள்ளன.

Gilli

அந்தவகையில் இப்போது விஜய், திரிஷா நடிப்பில் 2004ம் ஆண்டு வெளியான படம் 'கில்லி' வரும் ஏப்ரல் 17ம் தேதி ரீரிலீஸ் ஆகவுள்ளது. கில்லி படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆன நிலையில் அதனைக் கொண்டாடும் விதமாக ரீரிலீஸ் செய்யப்பட உள்ளது. சென்ற ஆண்டு விஜய் திரிஷா நடிப்பில் வெளியான 'லியோ' திரைப்படத்தின் அப்டேட் வெளியான முதலே, ரசிகர்கள் திரிஷா, விஜய் ஜோடியையும் 'கில்லி' படத்தின் சிறப்புகளைப் பற்றியும் இணையத்தில் மீம்ஸ் போட்டே அனைவரின் மனதிலும் கில்லி ஜோடியை மீண்டும் மனதில் பதிய வைத்தனர்.

அதன்பின்னர் எத்தனை படம் ரீரிலீஸ் செய்யப்பட்டாலும் கில்லி படம் எப்போது ரீரிலீஸ் ஆகும் என்ற கேள்விகள் எழுந்த வண்ணம் இருந்தன. இப்போது அந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாகத்தன் கில்லி படம் ரீரிலீஸ் ஆகவுள்ளது. இதனையடுத்து இதனுடைய போஸ்டர் X தளத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

மீண்டும் 20 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த விஜய், திரிஷா ஜோடியைத் திரையில் பார்ப்பதற்கு ரசிகர்கள் கூட்டம் அலைமோதும் என்பதைச் சொல்லவே தேவையில்லை.

புதுமைக்கொரு எடுத்துக்காட்டு; துணிச்சலுக்கு ஓர் அடையாளம் - HBD பார்த்திபன் Sir!

நிக்ரஹம் செய்யத் தெரியாதவள்!

இரை தந்த இறைவனுக்கு இரையாலேயே அபிஷேகம்!

கடலை மாவை முகத்தில் பயன்படுத்துவதற்கு முன் இத தெரிஞ்சுக்கோங்க! 

ஐப்பசி அன்னாபிஷேகம் தோன்றிய வரலாறு!

SCROLL FOR NEXT