Ambani Bought Annapurna Studio. 
வெள்ளித்திரை

நாகார்ஜுனாவின் ஸ்டூடியோவை வாங்கிய ரிலையன்ஸ்.. பாலிவுட்டை அடுத்து தெலுங்குதான்!

பாரதி

தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் தந்தையானப் பழம்பெரும் நடிகர் நாகேஸ்வர ராவ் வாங்கிய ஸ்டூடியோவைத் தற்போது ரிலையன்ஸ் பல கோடிகளுக்கு வாங்கியுள்ளது.

தெலுங்குத் திரையுலகில் ஒரு முக்கிய நடிகராக இருந்து வந்தவர் நடிகர் நாகேஸ்வர ராவ். நாகார்ஜுனாவின் தந்தை மற்றும் நாக சைதன்யாவின் தாத்தாவுமான இவர் எம்.டி.ராமராவின் நெருங்கிய நண்பர் ஆவார். தமிழ், தெலுங்கி, ஹிந்தி ஆகிய மொழிகளில் சுமார் 271 படங்களில் அவர் நடித்துள்ளார்.

2014ம் ஆண்டு நாகார்ஜூன், நாக சைதன்யா, நாகேஸ்வரர், நாக சைதன்யாவின் தம்பி அகில், சமந்தா ஆகியோர் குடும்பமாகச் சேர்ந்து நடித்தப் படம் மனம். இதுதான் அவரின் கடைசி படமாகும். அதே ஆண்டு அவர் தனது 89 வயதில் இயற்கை எய்தினார்.

நடிப்பின் அசுரனான இவர் தனது மனைவியின் பெயரில் அன்னப்பூர்ணா என்ற ஸ்டூடியோவையும் ஆரம்பித்தார். நாகேஸ்வர ராவ் ஸ்டூடியோ கட்ட ஆசைப்பட்டவுடன் ஆந்திர அரசு 1976ம் ஆண்டு அவருக்கு 22 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியது. இது ஹைத்ராபாத்தில் பஞ்சரா ஹில்ஸில் அமைந்துள்ளது.

அதனை அவர் ஒரு ஏக்கருக்கு ரூ7, 500 முதல் ரூ 8000 ஆயிரத்திற்கு வாங்கினார். முழு நிலமும் அப்போதைய விலைக்கு ஏறத்தாழ ஒன்றரை லட்சம் வந்தது. அந்த நிலத்தில்தான் நாகேஸ்வர ராவ் அன்னப்பூர்ணா ஸ்டூடியோவைக் கட்டினார். தற்போது அந்த நிலத்தின் மொத்த விலை  600 முதல் 650 கோடிக்கு மேல் இருக்கும்.

அந்தவகையில் அனில் அம்பானி தலைமையிலான திரைப்படம் மற்றும் பொழுதுபோக்கு நிறுவனமான ரிலையன்ஸ், சத்தமில்லாமல் அந்த நிலத்தை வாங்கியுள்ளது. இதுத்தொடர்பாக ரிலையன்ஸ் மீடியா வொர்க்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி அனில் அர்ஜூன் கூறியதாவது, “திரையுலகில் இதுபோன்ற ஒப்பந்தம் செய்வது  இதுவே முதல்முறையாகும். பாலிவுட்டிற்கு அடுத்து நாட்டிலேயே இரண்டாவது பெரிய திரையுலகில் எங்களின் இருப்பை விரிவுப்படுத்த விரும்பிதான் அந்த நிலத்தைக் கைப்பற்றியுள்ளோம்.

அக்கினேனி நாகேஸ்வர ராவ் தெலுங்கு சினிமாவில் ஒரு பெரிய சகாப்தத்தைத் தொடங்கினார். அவருக்குத்தான் முதன்முதலில் சூப்பர் ஸ்டார் என்றப் பெயர் வந்தது. இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இவருக்கு ஜனவரி 26, 1968ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

அவரை சினிமாத்துறையில் பல பேர் அரசியலுக்கு வரும்படி கூறியும் அவர் வரவில்லை. அதேபோல் எம்.டி.ராமராவ் ஆந்திரா முதல்வராகப் பதவியேற்றபோது அவருக்கு முக்கியமானப் பதவிகளைக் கொடுக்க முன்வந்தார். ஆனால் அவர் அவற்றை நிராகரித்துவிட்டார்.” இவ்வாறு அவர் பேசினார்.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT