Thandel Movie Sai pallavi and Naga chaitanya
Thandel Movie Sai pallavi and Naga chaitanya  
வெள்ளித்திரை

சாய் பல்லவி, நாக சைதன்யா இணையும் புதிய படம்!

பாரதி

ண்மைக் கதையை மையமாகக்கொண்டு உருவாகும் தண்டேல் படத்தில் மீண்டும் சாய் பல்லவி மற்றும் நாக சைதன்யா இணைந்து நடிக்கவுள்ளனர்.

கார்த்திகேயா 2 படத்தின் இயக்குனர் சந்து மொண்டேடிதான் தண்டேல் படத்தையும் இயக்கவுள்ளார். இப்படத்தில் மீண்டும் சாய் பல்லவி மற்றும் நாக சைதன்யா இணைந்து நடிக்கவுள்ளனர். இவர்கள் இருவரும் ஏற்கனவே 2021ம் ஆண்டு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கிய ‘லவ் ஸ்டோரி’ படத்தில் இணைந்து நடித்தனர்.

இந்நிலையில் இன்று தண்டேல் படத்தின் பூஜை நடைபெற்றது. இப்படத்தை அல்லு அரவிந்தின் Bunny vaas GA 2 Pictures தயாரிக்கவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு ஸ்ரீகாகுலம் பகுதியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தண்டேல் படத்தின் படப்பிடிப்பு இம்மாதத்தில் தொடங்கி அடுத்த ஆண்டு மே மாதத்தில் திரயிடப்படும் எனப் படக்குழு அறிவித்தது. இயக்குனரும் தயாரிப்பாளரும் ப்ரீ ப்ரொடக்ஷன் வேலைகளில் முழு மூச்சாக இறங்கியுள்ளனர். இப்படத்திற்கு DSP இசையமைக்கவுள்ளார்.

தண்டேல் படம் ஒரு மீனவனின் காதல் பற்றிய உண்மைக் கதை. அதனால் சாய் பல்லவிக்கு இது முக்கியத்துவம் வாய்ந்த படமாக இருக்கும். மேலும் இப்படத்திற்கு நாக சைதன்யா தனது உடல் எடையைக் கூட்டியுள்ளார். இப்படம் நல்ல கதைக்களம் கொண்ட படம் என்பதால் அதிகமாகவே பட்ஜட் போட்டு எடுக்க திட்டமிட்டுள்ளனர்.

தண்டேல் படத்திற்காக இயக்குனர் மொண்டேடி மற்றும் நாக சைதன்யா கே மாட்சிசேலம் என்ற மீனவ கிராமத்திற்கு சென்று அவர்களுடைய கலாச்சாரம், உணவு ,வாழ்க்கை முறை ஆகியவற்றைப் பற்றித் தெரிந்துக்கொண்டார்கள்.

சமீபத்தில் தான் நாக சைதன்யா நடித்த தூதா வெப் சீரிஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதுவே நாக சைதன்யாவின் முதல் ஓடிடி படமாகும். இப்படத்தை விக்ரம் கே.குமார் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே நாக சைதன்யா வைத்து 2013ம் ஆண்டு மணம் என்ற படத்தை இயக்கினார். இந்த படத்தில் நாக சைதன்யா , சமந்தா, நாகார்ஜுன் மற்றும் கேமியோ ரோலில் அகில் அக்னேனி என குடும்பத்துடன் நடித்தார்கள்.

இதனையடுத்து இந்த பூஜை க்ளிக்ஸ் மூலம் தான் நாக சைதன்யாவின் அடுத்தப் படத்திற்கான அப்டேட் வெளியானது.தண்டேல் பூஜை க்ளிக்ஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் X தளத்திலும் சாய் பல்லவி மற்றும் நாக சைதன்யா ஆகியோர் ட்ரெண்டிங்கில் உள்ளனர்.

ஸ்படிக மாலையால் கிடைத்த விஷ்ணு சஹஸ்ரநாமம்!

‘கத்புட்லி’ பொம்மலாட்டம் பற்றித் தெரிந்து கொள்ளுவோமா?

நல்ல சகுனம், கெட்ட சகுனம் எவை தெரியுமா?

உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உணவுகளை இப்படிச் சாப்பிட்டு பாருங்களேன்!

க்ளூடாமைன் அதிகமுள்ள உணவுகள் தெரியுமா?

SCROLL FOR NEXT