சாய் பல்லவி - ஜுனைத் கான்
சாய் பல்லவி - ஜுனைத் கான் 
வெள்ளித்திரை

பாலிவுட் படத்தில் களமிறங்கிய சாய் பல்லவி.. அமீர் கான் மகனுக்கு ஜோடி.. வைரலாகும் போட்டோஸ்!

விஜி

டிகர் அமீர் கான் மகன், ஜுனைத் கானுக்கு ஜோடியாக சாய் பல்லவி பாலிவுட் திரையுலகில் அறிமுகமாகும் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோஸ் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் அமீர் கானை தொடர்ந்து, அவருடைய மகனை ஜுனைத் கானும் தற்போது சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகினார். இந்த படத்தில் ஜுனைத் கானுக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடிக்கிறார். இப்படம் மூலம் சாய் பல்லவி பாலிவுட் திரையுலகில் நுழைகிறார். இந்த ஆண்டில் இறுதியில் இப்படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ள நிலையில், தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

ஜப்பானில் படக்குழுவினர் உள்ள நிலையில், அங்கு சப்போரோ பனி விழாவை ஜூனைத் கான் மற்றும் சாய் பல்லவி ரசித்து கொண்டிக்கும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் சில வெளியாகியுள்ளன. சாய் பல்லவி மற்றும் ஜுனைத் கான் இருவருமே தங்களை குளிரில் இருந்து தற்காத்து கொள்ள சிக் ஜாக்கெட், கோட் மற்றும் இயர் மஃப்ஸ் அணிந்துளளனர்.

படக்குழுவினரோடு இருவருமே தங்களின் மகிழ்ச்சியை பரிமாறி கொள்ளும் இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தை சுனில் பாண்டே இயக்க, அமீர் கான் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மனக்கவலையைப் போக்கி மனக்கோயிலைத் திறக்கும் மந்திர சாவிகள்! கைலாஷ் தபோவன மகிமை!

அதிவிரைவான பயணத்திற்கு பறக்கும் டாக்சி!

எந்தெந்த அணிகள் ப்ளே ஆஃப் செல்லும்? வெளியானது வெற்றி விகிதம்!

உலர் கண் பிரச்னை - காரணங்களும் தீர்வுகளும்!

அன்றும் இன்றும்... நல்லதும் கெட்டதும்... படங்கள் சொல்லும் அனைத்தும்!

SCROLL FOR NEXT