Sikandar movie
Sikandar movie 
வெள்ளித்திரை

சல்மான் கானின் 'சிக்கந்தர்' திரைப்படம்! ஏ.ஆர் முருகதாஸின் இயக்கத்தில்...

கண்மணி தங்கராஜ்

பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘சிக்கந்தர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும்  இந்த படத்திற்கான பணிகள் தொடங்கியிருப்பதை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் படம் அடுத்தாண்டு ரம்ஜானுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ்:

தீனா படத்தின் மூலம் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான ஏ.ஆர். முருகதாஸ் விஜயகாந்தின் ரமணா, நடிகர் சூர்யாவின் கஜினி, மற்றும் ஏழாம் அறிவு, நடிகர் விஜயின் துப்பாக்கி, கத்தி மற்றும் சர்க்கார்,  மகேஷ் பாபுவின் ஸ்பைடர் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் என பல வெற்றிப் படங்களையும் இயக்கியுள்ளார்.

அதுமட்டுமின்றி கஜினி படத்தை பாலிவுட்டில் அமீர்கானை வைத்து இயக்கி மிகப்பெரிய ஹிட் திரைப்படத்தை கொடுத்தார். துப்பாக்கி படத்தின் ரீமேக்காக அக்ஷய் குமார் நடித்த ஹாலிடே திரைப்படம் வெற்றி பெற்றது. மேலும் சோனாக்ஷி சின்ஹாவை வைத்து அக்கிரா எனும் படத்தையும் இயக்கி இருந்தார். தெலுங்கில் சிரஞ்சீவி வைத்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய ஸ்டாலின் திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கான ‘ஜெய் ஹோ’ படத்தில் சல்மான்கான் நடித்திருந்தார். ஆனால் இப்படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கவில்லை.

சல்மான் கானின் ட்விட்டர் பதிவு:

இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சல்மான்கான் நடிக்க உள்ள புதிய படத்திற்கு ‘சிக்கந்தர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படமானது அடுத்த ஆண்டு ரம்ஜான் பண்டிகைக்கு வெளியாகும் என்ற அப்டேட்டை சல்மான்கான் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதோடு அந்தப் பதிவில் இந்த ஆண்டு வெளியான படே மியான் சோட்டே மியான் மற்றும் மைதான் உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும் என அல்லாவை வேண்டிக் கொள்வதாக சல்மான் கான் பதிவிட்டுள்ளார். 

உலகின் இரண்டாவது சுவையான குடிநீர் சிறுவாணி பற்றி தெரியுமா?

உலகளந்த பெருமாள் கோயில் சிறப்புகள்- காஞ்சிபுரம்!

அதர்வாவுடன் இணையும் பிரபல கண்டென்ட் கிரியேட்டர்!

சிக்மா வகைப் பெண்களின் சிறப்பியல்புகள் தெரியுமா?

ஈரானில் இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!

SCROLL FOR NEXT