ஆர்.ஜே.பாலாஜி இயக்கி நடித்த மூக்குத்தி அம்மன் படம் குடும்ப ரசிகர்களை ஈர்த்தது. அந்தவகையில் இப்படத்தில் நடிக்க எந்தெந்த ஹீரோயின்களை தேர்ந்தெடுத்தார் என்பது குறித்து தெரியுமா?
ஆர்.ஜே.பாலாஜி மற்றும் என்.ஜே.சரவணன் ஆகியோர் இணைந்து இயக்கிய மூக்குத்தி அம்மன் படம் 2020ம் ஆண்டு வெளியானது. இந்தப் படத்தில் நயன்தாரா மற்றும் பாலாஜி ஆகியோர் சேர்ந்து நடித்த காட்சிகள் நல்ல வரவேற்பை பெற்றன. அதேபோல் அம்மாவாக நடித்த ஊர்வசி மற்றும் மூன்று அக்கா தங்கைகளின் எதார்த்தமான நடிப்புகள் தனித்துவமாக இருந்தன. ஒரு நல்ல என்டெர்டெயின்மென்ட் படமாகவும், அதேசமயம் ஒரு நல்ல கருத்தைக் கொடுத்த படமாகவும் மூக்குத்தி அம்மன் இருந்தது.
ஒருமூச்சு மீனா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் தொடர்ந்து அம்மன் கதாபாத்திரங்களில் நடித்தனர். அதன்பின்னர் நீண்டக் காலம் சாமி படங்கள் வராமல் இருந்தன. அப்படி வந்தாலும் அவ்வளவாக ஹிட் கொடுக்கவில்லை. அந்தவகையில் மூக்குத்தி அம்மன் படத்தின்மூலம் மீண்டும் ஒரு அம்மன் படம் கம்பேக் கொடுத்தது அனைவரையும் ரசிக்க செய்தது.
குறிப்பாக இப்படம் கொரோனா காலத்தில் வந்ததால், ஒடிடியில் மட்டுமே வெளியானது. இருப்பினும், ரசிகர்களின் பேராதரவை பெற்றது. இந்நிலையில் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தின் பணிகள் ஆரம்பமானது என்றும், விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது. இந்தப் படத்தில் அம்மனாக நயன்தாராவுக்கு பதிலாக நடிகை த்ரிஷா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இந்தநிலையில் ஆர்.ஜே.பாலாஜி மூக்குத்தி அம்மன் படத்தில் யாரை அம்மனாக தேர்ந்தெடுப்பது குறித்து ஒரு சிறிய தடுமாற்றமும் மனஸ்தாபமும் ஏற்பட்டதாக கூறினார்.
அதாவது, “மூக்குத்தி அம்மன் கதை எழுதி முடித்த நேரம். முழு கதையையும் யாருக்குமே சொல்லவில்லை. பார்ப்பவர்களிடம் அடுத்தப் படத்தின் ஒன் லைன் இதுதான் என்று சொல்வேன். அப்போது ஒருமுறை ஸ்ருதிஹாசன் போன் செய்தார். நான் அப்போது போனைப் பார்க்கவில்லை. மீண்டும் வந்து அவருக்கு போன் செய்து பேசினேன்.
பேசும்போது இப்போது நான் எழுதும் கதைப்பற்றி கேட்டார். நான் அவசரமாக முந்திக்கொண்டு முழு கதையையும் கூறிவிட்டேன். கதைப் பிடித்துப்போய் நானே நடிக்கிறேன் என்று கூறிவிட்டார். நானும் சரி என்றேன். ஆனால், கதை எழுத ஆரம்பிக்கும் முன்னரே இந்த அம்மன் கதாபாத்திரத்திற்கு அனுஷ்கா அல்லது நயன்தாரா ஆகியோர்தான் மனதில் பதிந்தனர். ஆனால், ஸ்ருதி ஹாசன் நடிக்கிறேன் என்று கூறியதும் முந்திரிக்கொட்டையாக உடனே அதற்கு ஒப்புக்கொண்டுவிட்டேன்.
இதற்கிடையே விக்கியை எதர்ச்சியாக ஒரு இடத்தில் சந்தித்தேன். அவர் “என்னடா நயன்கிட்ட கத சொல்லைலயா?” என்று கேட்டார். அப்போதுதான் நான் என்ன செய்வது என்று தெரியாமல், ஸ்ருதி ஹாசனிடம் நிலைமையை சொல்லி சமாளித்து. நயந்தாராவிடமே கதையை சொல்லி, நடிக்க வைத்தேன்.” என்றார்.
மாடர்ன் லுக்னா ஸ்ருதி ஹாசனுக்கு மாஸாக இருக்கும், ஆனால், அம்மன் லுக் என்றால், நினைத்து பாருங்களேன். 'மாடர்ன் அம்மனாக ஸ்ருதிஹாசன்' என்றுதான் டைட்டில் வைத்திருப்பார் ஆர்.ஜே.பாலாஜி