Thug Life Simbu 
வெள்ளித்திரை

நியூ தக்... கமலின் தக் லைஃப் படத்தில் STR... மாஸ் புரோமோ வைரல்!

விஜி

கமலஹாசன் நடிப்பில் உருவாகிவரும் Thug life படத்தில் நடிகர் சிம்பு இணைவதாக முன்னதாகவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், புது வீடியோ ஒன்று வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் மணிரத்னம் இணைந்து 35 வருடங்களுக்கு பிறகு கமல் 234 படத்தின் மூலம் இணைகிறார்கள். Thug life என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில், துல்கர் சல்மான், ஜெயம் ரவி மற்றும் த்ரிஷா ஆகியோர் நடிக்கவுள்ளதாக சென்ற ஆண்டே செய்திகள் வந்தன. த்ரிஷா தனது கதாப்பாத்திரத்தில் நடித்து முடித்து விட்டதாக சினிமா வட்டாரத்தினர் கூறுகின்றனர். அந்த வகையில் முதலாவதாக தக்லைஃப் படத்திலிருந்து மலையாள நடிகர் துல்கர் சல்மான் விலகுவதாக செய்திகள் கசிந்தன.

அவர் தமிழில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகவிருக்கும் புறநானூறூ படம் உட்பட பல படங்கள் கைவசம் வைத்திருக்கிறார். ஆகையால், பிஸி லைனப்பில் உள்ள துல்கருக்கு தக்லைஃப் படத்தில் நடிக்கப் போதிய நாட்கள் இல்லாததால் படத்திலிருந்து விலகியதாகக் கூறப்பட்டது. அடுத்ததாக ஜெயம் ரவியும் படத்திலிருந்து விலகியதாக சொல்லப்பட்டது. ஏனெனில் ப்ரெதர், ஜீனி உட்பட இந்த ஆண்டு மட்டும் அவர் 4 படங்களைக் கைவசம் வைத்திருக்கிறார். ஆகையால் தேதி கிடைக்காமல் தான் அவரும் விலகியதாகக் கூறப்படுகிறது.

அந்தவகையில் படத்திலிருந்து விலகிய நடிகர்களுக்கு பதிலாகப் புதிய நடிகர்களைத் தேர்ந்தெடுக்க படக்குழு பல நடிகர்களிடம் பேசி வந்தது. இதனையடுத்து துல்கர் சல்மானுக்கு பதிலாக சிலம்பரசன் நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகின. அவரை வைத்து ஏப்ரல் மாதம் இறுதிக்குள் சிம்புவின் போர்ஷனை முடிக்கப் படக்குழுத் திட்டமிட்டுள்ளது. இதனையடுத்து இந்த செய்தியும் அதிகாரப்பூர்வமானது.

தொடர்ந்து தக் லைஃப் படத்தில் அவரின் தோற்றம் குறித்த விடியோ நேற்று வெளியான நிலையில், படத்தின் புதிய புரோமோ ஒன்று மாஸாக வெளியாகியுள்ளது. அதில் நியூ தக் என்று சிலம்பரசன் படத்தில் நடிப்பதை உறுதியாக அறிவித்துள்ளனர். மேலும் அதில் சிம்பு புழுதி பறக்க காரை சுழற்றி துப்பாக்கியால் சுடும் காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த வீடியோவை பார்த்த சிம்பு ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். மாநாடு படத்திற்கு பிறகு தனது உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் சிம்பு, பத்து தல படத்தை தொடர்ந்து இந்த படத்திலும் மாஸான லுக்கில் இடம்பெற்றுள்ளார்.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT