80ஸ், 90ஸ்களில் வாழ்ந்த சில்க் ஸ்மித்தா இன்று உயிரோடு இல்லாவிட்டாலும் அவருக்கு இருக்கும் மவுசு இன்று வரை குறையவில்லை என்பதை மார்க் ஆண்டனி படம் நிரூபித்துள்ளது.
நடிகை சில்க் ஸ்மிதாவை வினுசக்கரவர்த்தி தான் வண்டிச்சக்கரம் திரைப்படத்தில் சிலுக்கு என்ற சாராயம் விற்கும் பெண் கதாபாத்திரத்தில் அறிமுகப்படுத்தினார். அன்று முதல் இவர் சில்க் ஸ்மிதாவாக அழைக்கப்பட்டார். விஜயலட்சுமி என்ற இயர்பெயரை கொண்ட இவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர், ஒப்பனை கலைஞராக திரைத்துறை வாழ்க்கைக்குள் வந்தவர், ரஜினி, கமல்ஹாசன் என பெரிய பெரிய நடிகர்களுடன் நடித்து பிரபலமானார்.
இவர் நடித்தால் தான் படம் ஓடும் என்றளவிற்கு கூட ஒரு நாளில் மிக முக்கிய பிரபலமாக மாறினார். ஆனால் 1996ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி இவ்வுலகை விட்டு பிரிந்து ரசிகர்கள் அனைவரையும் மீளா துயரத்தில் ஆழ்த்தினார். இவர் மறைந்தாலும் இவரின் புகழ் இன்றும் ஒலித்து கொண்டிருக்கிறது. இதற்கு சான்றாகதான் மார்க் ஆண்டனி படத்தில் சில்க் கதாபாத்திரத்தில் விஷ்ணு பிரியா என்பவர் நடித்திருப்பார். இந்த ஒரே ஒரு சீனுக்காக பல ரசிகர்கள் திரையரங்கிற்கு சென்றார்கள் என்றே கூறலாம்.
இந்த நிலையில் இவரின் வாழ்க்கை கதை தமிழில் படமாக அமையவுள்ளது. ஏற்கெனவே இந்தி, மலையாள மொழிகளில் திரைப்படமாக உருவாகி இருந்தாலும் மேலும் ஒரு திரைப்படம் உருவாகிறது. 'சில்க் ஸ்மிதா - தி அன்டோல்ட் ஸ்டோரி' என்ற தலைப்பில் உருவாகும் இந்தப் படத்தை எஸ்.பி.விஜய் தயாரிக்கிறார்.
ஜெயராம் இயக்கும் இந்தப் படத்தில் சில்க் ஸ்மிதாவாக, நடிகை சந்திரிகா ரவி நடிக்கிறார். இவர் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் பேயாக நடித்திருந்தார். நகுலின் செய் படத்திலும் நடித்துள்ளார். சில்க் ஸ்மிதா வாழ்க்கை கதை தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் முதல் தோற்ற போஸ்டரை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.