Sivakarthikeyan 
வெள்ளித்திரை

"நல்ல ஃபன்னான பொழுதுபோக்கு படம்" மலையாள படத்தை பாராட்டிய சிவகார்த்திகேயன்!

விஜி

கோடி கணக்கில் வசூல் சாதனை படைத்து வரும் மலையாள படத்திற்கு சிவகார்த்திகேயன் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

தமிழ் திரைப்படங்களை தாண்டி தற்போது மலையாள படங்கள் ஹிட்டடித்து வருகின்றன. அதுவும் தமிழில் டப்பிங் செய்யாமலேயே மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சமீபத்தில் வெளியான மஞ்சுமல் பாய்ஸ் அதிக வசூல் பெற்று சாதனை படைத்து வரும் நிலையில், அடுத்தபடியாக பிரேமலு திரைப்படமும் சாதனை படைத்து வருகிறது.

"தண்ணீர் மாத்தன் தினங்கள்" மற்றும் "சூப்பர் சரண்யா" போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய புகழ்பெற்ற இயக்குனர் தான் கிரிஷ் ஏ.டி. இவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் தான் பிரேமலு. இந்த படத்தின் மூலம் மீண்டும் பார்வையாளர்களின் இதயங்களைக் கவர்ந்துள்ளர் இயக்குனர் கிரிஷ். ரோம்-காம் வடிவில் உருவாகி உள்ள இந்த மலையாளத் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது. உலகளாவில் பாக்ஸ் ஆபிஸில் ரூ.110 கோடிக்கும் மெல் வசூல் செய்துள்ளது.

நஸ்லென் கே.கஃபூர் மற்றும் மமிதா பைஜு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரேமலு படம் தற்போதைய சினிமா உலகில் வெளியாகியுள்ள வித்தியாசமான காதல் திரைப்படம் ஆகும். இப்படம் பல இளைஞர்களின் மனதை கட்டி இழுதுள்ளது. கிரிஷ் ஏ.டி.யின் திறமையான இயக்கம் இந்த படத்தை நகைச்சுவையையும், இதய பூர்வமான படமாகவும் ஒரு தரமான சினிமா அனுபவத்தையும் நமக்கு தருகிறது.

அதேசமயம் வசீகரிக்கும் கதைக்களத்தை கொண்டிருக்கும் பிரேமலு படம் நகைச்சுவையுடன் நல்ல காதல் கதையையும் கொண்டிருப்பது வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளது. நஸ்லென் கஃபூர் மற்றும் மமிதா பைஜு ஆகியோருக்கு இடையில் நடக்கும் அழகான காதல் ரசிகர்களுக்கு புதுவித சினிமா அனுபவத்தையும், அதே சமயம் பல இடங்களில் சிரிப்பையும் வர வைக்கிறது. தனது இலட்சியங்களுக்கும் எதிர்பாராத காதலுக்கும் இடையில் சிக்கி தவிக்கும் ரீனுவாக மமிதா பைஜூவின் கதாபாத்திரம் கவனத்தை பெறுகிறது.

சமீபத்தில் பிரேமலு படத்தைப் பார்த்த சிவகார்த்திகேயன், ‘பிரேமலு டீமுக்கு என்னுடைய வாழ்த்துகள், அருமையான ஜாலியான என்டர்டெயினர்’ என்று பாராட்டியிருந்தார். சமூகவலைதளத்தில் அவர் பகிர்ந்திருந்த இந்தப் பாராட்டு தற்போது வைரலாகி வருகிறது. ஏற்கனவே இந்த படத்திற்கு மகேஷ் பாபு உள்பட பல திரைபிரபலங்கள் பாராட்டியிருந்தனர். இப்போது சிவகார்த்திகேயனும் பிரமேலு படத்தையும், அதன் டீமையும் பாராட்டியுள்ளார்.

புதுமைக்கொரு எடுத்துக்காட்டு; துணிச்சலுக்கு ஓர் அடையாளம் - HBD பார்த்திபன் Sir!

நிக்ரஹம் செய்யத் தெரியாதவள்!

இரை தந்த இறைவனுக்கு இரையாலேயே அபிஷேகம்!

கடலை மாவை முகத்தில் பயன்படுத்துவதற்கு முன் இத தெரிஞ்சுக்கோங்க! 

ஐப்பசி அன்னாபிஷேகம் தோன்றிய வரலாறு!

SCROLL FOR NEXT