Garudan 
வெள்ளித்திரை

முதல் நாளே வசூலில் பட்டைய கிளப்பிய சூரியின் கருடன்... எவ்வளவு தெரியுமா?

விஜி

சூரியின் கருடன் படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன் விவரம் வெளியாகியுள்ளது.

நகைச்சுவை நடிகராக இருந்த சூரி, வெற்றிமாறன் இயக்கத்தில் தயாரான விடுதலை 1 படத்தில் ஹீரோவாக நடித்து அனைவரையும் கவர்ந்தார். இந்த படத்தின் இரண்டாம் பாகமும் தயாராகி வரும் நிலையில், கூழாங்கல் படத்தை இயக்கிய பி.எஸ்.வினோத்தின் கொட்டுக்காளி படத்திலும் ஹீரோவாக நடிக்கிறார். மேலும், ராம் இயக்கத்தில் ஏழு கடல் ஏழு மலை படத்தில் நிவின் பாலியுடன் இரண்டு கதாநாயகர்களில் ஒருவராக நடித்துள்ளார். இந்த ஏழு கடல் ஏழு மலை மற்றும் விடுதலை 2 படங்கள் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் சமீபத்தில் திரையிடப்பட்டு, நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படங்கள் தவிர வெற்றிமாறன் எழுதி, துரை செந்தில்குமார் இயக்கி வரும் கருடன் படத்தில் சசிகுமார், மலையாள நடிகர் உன்னி முகுந்தன் ஆகியோருடன் சேர்ந்து முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் விடுதலை படத்தையும் தாண்டி ஆக்சன் ஹீரோவாக நடித்து அசத்தியுள்ளார். இதுவரை சூரியை இப்படி பார்த்ததே இல்லையென ரசிகர்கள் கமெண்ட்டுகளை தட்டி வருகின்றனர். மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளார் நடிகர் சூரி.

இந்த படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் வெளியான முதல் நாளே, ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல விமர்சனங்களை பெற்று வந்த நிலையில், முதல் நாளில் மட்டும் சுமார் ரூ.4 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. அடுத்தடுத்து சனி - ஞாயிறு விடுமுறை நாள் என்பதால் வசூல் அதிகரிக்கும் என திரையரங்கு உரிமையாளர்கள் கூறியுள்ளனர். விடுதலை வெற்றிக்கு பின்னர் சூரிக்கு இப்படம் நல்ல ஓப்பனிங்காக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT