இயக்குனர் அருணாச்சலம்
இயக்குனர் அருணாச்சலம் 
வெள்ளித்திரை

‘சாட் பூட் த்ரி’ தமிழ்ப் படத்துக்கு தென்கொரிய விருது!

லதானந்த்

-லதானந்த்

தென் கொரியாவின்  தலைநகர் சியோலில் கடந்த 7 மற்றும் 8-ம் தேதிகளில் நடந்த செல்லப் பிராணிகள் குறித்த பன்னாட்டுத் திரைப்பட விழாவில் (International Comap on Animal FIlm Festival) சிறந்த திரைப்படத்துக்கான விருது (ICAFF Excellence for Feature) தமிழ்த் திரைப்படமான ‘சாட் பூட் த்ரி’ படத்துக்குத் வழங்கப்பட்டுள்ளது.   

விருதுக்கான சான்றிதழையும், பணமுடிப்பையும் விழாவில் கலந்துகொண்ட படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளருமான அருணாச்சலம் வைத்யநாதன் பெற்றுக்கொண்டார்.

சாட் பூட் த்ரி விருது

நிகழ்வில் கொரியத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் முனைவர் பு.பாஸ்கரன், செயலாளர், செயற்பாட்டுக்குழு, அவர்கள் கலந்துகொண்டு இயக்குனரை வாழ்த்தி, தேவையான உதவி மற்றும் ஒத்துழைப்புக்களை வழங்கினார்.

பின்னர் இப்படம் கொரிய மக்களுக்குத் திரையிடப்பட்டது. படத்தில் இடம்பெற்ற குழந்தைகள் மற்றும் செல்லப் பிராணிகளுக்குமிடையேயான காட்சிகள் தமக்கு நெருக்கமாக இருந்ததாக கொரிய மக்கள் தெரிவித்தனர். 2016-ம் ஆண்டு முதல் நடக்கும் இந்தப் பன்னாட்டுத் திரைப்பட விழாவில் விருதுபெரும் முதல் இந்தியத் திரைப்படம் ‘சாட் பூட் த்ரி’ என்பது குறிப்பிடத்தக்கது.

விருது பெற்று தமிழகம் திரும்பிய ‘சாட் பூட் த்ரி’ இயக்குனர் அருணாச்சலம் வைத்யநாதன் நேற்று பேசியபோது, ‘’இப்படத்துக்கு விருது கிடைத்ததன் மூலம் "அன்பிற்கோர் பஞ்சமில்லை" என்ற இந்த படத்தின் மூலக்கருவை நிஜத்தில் உணரச் செய்தது’’ என்றார், இயக்குனர்.

சாட் பூட் த்ரி விருது

‘சாட் பூட் த்ரி’ படத்தை அருணாச்சலம் வைத்யநாதன் இயக்கத்தில் சினேகா, வெங்கட் பிரபு, யோகி பாபு, சிவாங்கி ஆகியோர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.

முன்னதாகக் கடந்த ஜூலை மாதம் விருதிற்கான விண்ணப்பங்கள் பன்னாட்டு அளவில் பெறப்பட்டு, செப்டம்பர் இறுதியில் முடிவுகள் வெளியிடப்பட்டன. புகழ் பெற்ற கொரிய திரைப்பட இயக்குனர்களான சாங் பியோம் கோ, சாங் ஜே லிம், மற்றும் கிவி தோக் லீ ஆகியோர் அடங்கிய குழு, விருதிற்கான படங்களைத் தெரிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுகதை : வீடு மனைவி மல்யுத்தம்!

ஒருவர் ஒரு நாளைக்கு இவ்வளவு சர்க்கரை தான் சாப்பிட வேண்டும்… அதிகம் சாப்பிட்டால்?  

தாமரை இலைத் தண்ணீரும், பஞ்சு திரியும்!

சிறுகதை - ஜல்லிக்கட்டுக் காளை!

மனதின் சக்தியை அறிந்தவரா நீங்கள்... வெற்றி மாலை உங்களுக்குத்தான்!

SCROLL FOR NEXT