Daniel Balaji 
வெள்ளித்திரை

தமிழ் சினிமாவின் பிரபல வில்லன் டேனியல் பாலாஜி மாரடைப்பால் மரணம்!

பாரதி

சீரியலிலிருந்து, வெள்ளித்திரையில் அறிமுகமாகி வில்லனாகவும், துணை நடிகராகவும் மக்கள் மனதில் தனி இடத்தைப் பிடித்த நடிகர் டேனியல் பாலாஜி திடீரென மாரடைப்பால் காலமானார்.

1975ம் ஆண்டு சென்னையில் பிறந்த பாலாஜி தனது 48 வயதில் காலமாகிவுள்ளார். நடிகர் முரளியின் தந்தையான சித்தாலிங்கையா, பாலாஜியின் மாமா ஆவார். அதர்வா முரளியின் மாமாவான டேனியல் பாலாஜி பட இயக்கத்திற்கானப் படிப்பை தரமணியின் படித்தார். இவர் முதன்முதலில் கமலின் வெளியிடப்படாத மருதநாயகம் படத்தில்தான் ப்ரொடக்ஸன் மேனேஜராகப் பணியாற்றினார். அதன்பின்னர் சித்தி சீரியலில் அறிமுகமான இவர் 2002ம் ஆண்டு 'ஏப்ரல் மாதத்தில்' என்றப் படத்தின் மூலம் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இதனையடுத்து தனுஷின் காதல் கொண்டேன் படத்தில் போலீஸாராக நடித்து தமிழ் மக்கள் மனதில் பதிவாகினார். தொடர்ச்சியாக காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், முத்திரை என பல படங்களில் துணை நடிகராக நடித்து சினிமாவில் தனக்கான இடத்தைப் பிடித்தார்.

அதேபோல் 2004ம் ஆண்டு 'ப்ளாக்' என்றப் படத்தில் நடித்து மலையாள சினிமாவிலும் அறிமுகமானார். இதுவரை மலையாளத்தில் 8 படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் ஐந்து படங்கள், கன்னட சினிமாவில் 4 படங்கள் என தன் வாழ்க்கை முழுவதும் சிறப்பான கதாப்பாத்திரங்களில் துணை நடிகராகவே நடித்தவர் டேனியல் பாலாஜி.

Daniel Balaji

வேட்டையாடு விளையாடு, காக்க காக்க ஆகிய படங்களின் மூலம் கவுதம் மேனனில் நெருங்கிய நண்பராக மாறிய டேனியல் பாலாஜி, யாருடைய படத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறினாலும் ஒருமுறைக்கூட கௌதம் படத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறியதேயில்லை என்று அவரே கூறியிருக்கிறார். அந்தவகையில் மறைவிற்கு முன் நடித்த அவரது கடைசிபடம் கௌதம் மேனனின் துருவ நட்சத்திரம்தான். இதில் இரண்டு மூன்று காட்சிகள் நடித்து தன் இறுதி படத்தையும் நண்பனுக்கே நடித்துக்கொடுத்திருக்கிறார்.

அந்தவகையில் டேனியல் பாலாஜிக்கு நேற்று இரவு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனையடுத்துதான் அவர் கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும்கூட அவரின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. தனது 48 வயதில் நெஞ்சு வலியில் இவர் திடீரென்று இறந்த செய்தி திரையுலகத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மறுப்பக்கம் ரசிகர்கள் இதனை ஏற்றுக்கொள்ள முடியாத இழப்பு என்று பதிவிட்டு வருகின்றனர். டேனியல் தனது கண்களை தானம் செய்து நிஜ உலகில் ஹீரோவாக மாறியிருப்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று.

இவரின் உடல் தற்போது புரசைவாக்கத்தில் உள்ள வரதம்மாள் காலனியில் உள்ள அவருடைய வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. வெற்றிமாறன், கௌதம் மேனன் ஆகியோர் இவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதேபோல் நடிகர்கள் மற்றும் திரையுலக வாசிகள் தங்களது வலைத்தளங்களிலும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இன்று மாலை 4 மணியளவில் அவரது உடல் ஓட்டேரியில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT