Thangalaan 
வெள்ளித்திரை

ஹிட்டடித்ததா தங்கலான் படம்... 2ஆம் நாள் வசூல் விவரம் இதோ!

விஜி

ஆகஸ்ட் 15 திரையரங்குகளில் வெளியான தங்கலான் திரைப்படம், 2ஆம் நாள் செய்த வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

சினிமாவில் தொடரும் பாலா - விக்ரம் போட்டி தற்போது பாக்ஸ் ஆபிஸிலும் வந்துள்ளது. விக்ரமின் மகன் நடித்த ஆதித்ய வர்மா பட பிரச்சனையை தொடர்ந்து இருவருக்கும் கருத்த் வேறுபாடு இருப்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் தங்கலானும், வணங்கானும் ஒரே நாளில் ரிலீஸ் செய்யப்படுவதாக சொல்லப்படுகிறது.

சியான் விக்ரம் நடிப்பில் 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்திற்குப் பின் பா.ரஞ்சித் இயக்கத்தில் ' தங்கலான்' படம் உருவாக்கப்பட்டது. பா.ரஞ்சித் இயக்கத்தில் 'சியான்' விக்ரம் நடிக்கும் படம் 'தங்கலான்'. இப்படத்தில் மாளவிகா மோகனன் விக்ரமிற்கு ஜோடியாக நடிக்க, பார்வதி திருவோத்து, பசுபதி, ஹரிகிருஷ்ணன் அன்புதுரை உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கோலார் தங்கவயல் பகுதியை மையமாக கொண்டு கதைகளம் இருப்பதால் இந்த தலைப்பை இப்படத்திற்கு வைத்துள்ளார். மேலும் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார்.

இந்த படம் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியானது.

படம் எப்படி இருக்கு?

விக்ரம் என்கிற ஒரு நடிகர் மற்ற அனைவரையும் தவிர, இப்படத்தில் மட்டுமல்ல, திரையுலகிலும் தனித்துத் தெரிவது ஏன் என்பது இதில் அவரது அர்ப்பணிப்பு மிகுந்த உழைப்பைப் பார்த்தால் தெரியும். சடை முடியும், அழுக்கான தோற்றமும், கோவணமும், கறை படிந்த பற்களும், துருத்தித் தெரியும் தொந்தியும்... எந்த இடத்திலும் தான் விக்ரம் இல்லை என்று அவரே சொன்னாலும் பார்ப்பவர்கள் நம்புவார்கள். ஒடுக்கப்பட்டோர், அதிகாரம் படைத்தோர் தொடர்பான வசனங்கள் படம் எங்கும் விரவி இருக்கின்றன. சந்தர்ப்பம் எங்கெங்கு கிடைக்கிறதோ அங்கெல்லாம் தனது அரசியலைப் பயன்படுத்தத் தயங்கவில்லை இயக்குனர் ரஞ்சித்.

படம் நல்ல வெற்றியை பெற்று வரும் நிலையில், முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ரிலீசான முதல் நாள் இந்தியாவில் மட்டும் 12.6 கோடி வசூல் செய்துள்ளது. மேலும், தமிழில் மட்டும் 11 கோடி வசூல் செய்துள்ளது ‘தங்கலான்’ படம். உலகளவில் ரூ. 26.44 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. மேலும் வடமாநிலங்களில் இந்த படம் வருகிற ஆகஸ்ட் 30ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது 2 நாள் முடிவில் இப்படம் உலகம் முழுவதும் ரூ.35 கோடி வரை வசூல் செய்துள்ளதாம்.

நடைப்பயிற்சிக்கு சிறந்த நேரம் காலையா? மாலையா?

கிரிப்டோவில் முதலீடு செய்வது சரியான யுக்தியா?

தண்ணீர் குடிப்பதற்கு இத்தனை விதிமுறைகளா? இது தெரியாம போச்சே!

சீதையின் அருள் பெற்ற அனுமன்!

அட, இப்படி ஒரு முறை தயிர் பச்சடி செஞ்சு சாப்பிட்டுப் பாருங்க! 

SCROLL FOR NEXT