சென்னை மதுரவாயலில் பிரபல சின்னத்திரை தம்பதியர் வீட்டில் டிவி உள்ளிட்ட பொருட்கள் திருடு போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சின்னத்திரை பிரபல ஜோடி ராஜ்கமல் மற்றும் அவரது மனைவி லதா பல சீரியல்களில் நடித்துள்ளனர், இருவரும் சின்னத்திரையில் கொடி கட்டி பறந்து வரும் நிலையில் இவர்கள் வாழ்வில் ஒரு அதிர்ச்சிகரமான செய்தி அரங்கேறியுள்ளது. காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்கள், அண்மையில் பல லட்சம் செலவில் பிரம்மாண்ட பங்களா ஒன்றை கட்டினர். இந்த வீட்டை அவர்கள் ஷூட்டிங்கிறாக விடுவதற்கே பார்த்து பார்த்து ஆசையாக கட்டியுள்ளனர்.
ஆசை பட்ட படியே வீட்டை கட்டிய அவர்கள், சீரியல், விளம்பரம், படம் என அனைத்தையும் ஷூட் செய்வதற்கு வீட்டை வாடகைக்கு அளித்துள்ளனர். தொடர்ச்சியாக இவரது வீட்டில் பல்வேறு ஷூட்டிங் எடுக்கப்பட்டுள்ளது. வீட்டில் நகை, பணம் எதுவும் இல்லாமல் வீட்டாலும் டிவி உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் உள்ளது.
இந்நிலையில், பங்களாவின் பின்புற கதவின் பூட்டை உடைத்து , விலையுயர்ந்த டிவி, மோட்டார் உள்ளிட்ட பொருட்களை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளார். வீட்டில் உள்ள பொருட்கள் திருடு போனதை உணர்ந்த தம்பதி அதிர்ச்சியில் உறைந்தனர்.
இது தொடர்பாக, ராஜ்கமல் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அதே தெருவில் வசிக்கும் பாஜக பிரமுகர் பொன். பிரபாகரின் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த காரும் திருடு போனது குறிப்பிடத்தக்கது. ஒரே தெருவில் அடுத்தடுத்த வீடுகளில் விலையுயர்ந்த பொருட்கள் திருடப்பட்ட சம்பவம் அரங்கேறியிருப்பது, அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.