Mohan 
வெள்ளித்திரை

இதனால்தான் அஞ்சலி படத்தில் நான் நடிக்க மறுத்துவிட்டேன் – நடிகர் மோகன்!

பாரதி

அஞ்சலி படத்தில் ரகுவரன் கதாபாத்திரத்தில் முதலில் தன்னை நடிக்கவே அழைத்தார்கள் என்றும், ஒரு காரணத்தால் நடிக்க மறுத்துவிட்டேன் என்றும் நடிகர் மோகன் பேசியுள்ளார்.

80களில் சினிமாவில் தனி ராஜ்யத்தை உருவாக்கி ஆட்சிப் புரிந்தவர், மோகன். இவர் நடிப்பும் இளையராஜாவின் பாடலும் சேர்ந்தால் அது ஒரு தனி வைப்தான். ரஜினி, கமல் போல் அப்போது அவரும் சினிமாவில் சிறந்து விளங்கினார். ஆனால், நாளடைவில் சிறந்த படங்கள் வராததால் அவர் முழுவதுமாக சினிமாவை விட்டு விலகினார். ‘மௌன ராகம்’, ‘மெல்லத் திறந்தது கதவு’, ‘உதய கீதம்’, ‘பாடு நிலாவே’ போன்ற படங்களில் நடித்த 80s ஹீரோ, தற்போது கோட் படத்தில் வில்லன் ரோலில் சிறப்பாக நடித்தார்.

மோகனின் இந்த கம்பேக் மிகவும் ஸ்டார்ங்காக இருக்கிறது என்றே கூற வேண்டும். ஏனெனில், தொடர்ந்து அடுத்தடுத்தப் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் கம்மிட்டாகும் இவர், மீண்டும் சினிமாவில் ஸ்டார்ங்காக வலம் வருவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

அந்தவகையில் இவர் அஞ்சலி படம் குறித்து பேசியுள்ளார்.1990ம் ஆண்டு மணி ரத்னம் இயக்கிய அஞ்சலி படத்தில் ரேவதி, ரகுவரன், பேபி ஷாமிலி, மாஸ்டர் தருண் ஆகியோர் நடித்திருந்தனர்.

இதில் ரகுவரன் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் நடிகர் மோகனிடமே பேசப்பட்டதாம். ஆனால் அவர் நடிக்க மறுத்துவிட்டதாலேயே ரகுவரன் அந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் பேசியதாவது, “அஞ்சலி படத்தில் ரகுவரன் கதாபாத்திரத்தில் என்ன தான் நடிக்க கேட்டாங்க. அந்த படத்துல எனக்கு உடன்பாடு இல்லாத ஒரு விஷயம் இருக்கு. பொதுவா ஒரு குழந்தைனா அப்பா அம்மா கூடதான் படுக்க வைப்போம். ஒரு தகப்பனா special child –அ தனியா ஒரு ரூம்ல படுக்க வைக்க எனக்கு உடன்பாடு இல்லை. அதனால்தான் நான் அந்த படத்துல நடிக்க மறுத்துவிட்டேன்.” என்று பேசினார்.

பொதுவாக சில நடிகர்கள் தனக்கென சில விதிமுறைகளையும் கட்டுபாடுகளையும் வைத்திருப்பார்கள். கதையிலையோ அல்லது காட்சிகளிலோ உடன்பாடு இல்லையென்றால், எவ்வளவு பணம் கொடுத்தாலும் நடிக்க மாட்டார்கள். அதேபோல்தான், மோகனும் இப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டார்.

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT