ஒவ்வொரு வார இறுதியிலும் ஓடிடி ரிலீசாக பல படங்கள் வெளியாகி ரசிகர்கள் இடையில் வரவேற்பை பெற்று வருகின்றன. அந்த வகையில் இந்த வாரம் தியேட்டரிலும், ஓடிடியிலும் வெளியாகும் படத்தின் லிஸ்ட்டை பார்க்கலாம்.
என்னதான் தியேட்டர்கள் இருந்தாலும் கொரோனாவுக்கு பிறகு ஓடிடியின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. டிஜிட்டல் மையத்திற்கு மாற, அனைவரும் வீட்டில் ஓடிடி சப்ஸ்கிரிப்ஷன் வைத்திருக்கிறார்கள். சமீப காலமாகவே தியேட்டரில் படம் ஓடும் காலம் போய்விட்டது. ரீ ரிலீஸ் கலாச்சாரம் வருவதால் பழைய படங்களை ரீ ரிலீஸ் செய்து தியேட்டர் ஓனர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றே சொல்லலாம். இந்த மாற்றத்திற்கு என்ன காரணம் என யோசித்து கொண்டிருக்கும் நிலையில், ஓடிடியின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. அப்படி இந்த வாரம் என்னென்ன படங்கள் வெளியாகிறது என்று பார்க்கலாம்.
ஸ்டார் (Star Movie)
டாடா படத்தின் வெற்றிக்கு பின்னர் கவின் நடித்துள்ள திரைப்படம் ஸ்டார். இப்படத்தை இளன் இயக்கி உள்ளார். இவர் இதற்கு முன்னர் பியார் பிரேமா காதல் படத்தை இயக்கி இருந்தார். இப்படம் மே 10ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.
ரசவாதி (Rasavathi)
மெளனகுரு, மகாமுனி போன்ற திரைப்படங்களை இயக்கிய சாந்தகுமார் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் தான் ரசவாதி. இப்படத்தில் அர்ஜுன் தாஸ் ஹீரோவாக நடித்துள்ளார். கொடைக்கானல் பின்னணியில் உருவாகி இருக்கும் சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படமான இதில் அர்ஜுன் தாஸ் ஜோடியாக தன்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளார். இப்படம் வருகிற மே 10ந் தேதி திரைகாண உள்ளது.
உயிர் தமிழுக்கு (Uyir Thamizhuku)
இயக்குனர் அமீர் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் உயிர் தமிழுக்கு. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சாந்தினி தமிழரசன் நடித்துள்ளார். ஆதம் பாவா இயக்கியுள்ள இப்படத்தில் அரசியல்வாதியாக நடித்துள்ளார் அமீர். இந்த படமும் வருகிற மே 10ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.
ஒடிடி படங்கள்:
சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியான 'தி பாய்ஸ்' திரைப்படம் இன்று (மே 7) ஆஹா ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகிறது. அதேபோல் வருகிற மே 9ந் தேதி பகத் பாசிலின் பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படமான 'ஆவேஷம்' அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளது. மேலும், கடந்த மாதம் திரைக்கு வந்த 'ரோமியோ' திரைப்படம் வருகிற மே 10ந் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.