பட்டு வண்ண ரோசாவாம் பார்த்த கண்ணு மூடாதாம்! என்ற பாடலுக்கு என்றும் மவுசு உண்டு! அந்தக் கதாநாயகியின் புகழ் மட்டும் மங்குமா என்ன? 66 வயதில், 45 ஆண்டு காலத்திரை அனுபவத்தைக் கொண்டாடும் வடிவுக்கரசியைத் திரை உலகப் பேரரசி என்று அழைத்தலே பொருத்தமாகும்!
எத்தனை விதமான புகழ் மாலைகள்! அவர் காலத்து நடிக, நடிகையரிலிருந்து இன்று வரை உள்ள அத்தனை பேரின் பாராட்டலுக்கும் ஆளாவது சாதாரணமான தல்ல!அந்தப் பேறு மிகச் சிலருக்கே கிடைக்கும்! அந்தப் பேறும் பெற்றவர் நம் வடிவுக்கரசி!
வெள்ளித் திரையில் 350 படங்களுக்கு மேல்
சின்னத்திரையில் 10 தொடர்களுக்கு மேல்
நாயகியாகப் பல படங்கள்
தாயாகப் பல திரைப்படங்கள்
சகோதரியாகப் பல
தென்னிந்திய மொழிகள் நான்கிலும் நடித்தவர்
சிகப்பு ரோஜாக்களில் அறிமுகம்
கன்னிப் பருவக் கதாநாயகி
அப்புறம் ஓட்டம்…ஓட்டம்…
திரும்பிப் பார்க்க நேரமேயில்லை
திரைப்பட ஜாம்பவான் ஏ.பி.நாகராஜன்,இவரின் பெரியப்பா
மரபணுவிலேயே நடிப்பு
இன்னொரு ஜாம்பவான் பாரதிராஜா படம் மூலம் அறிமுகம்
இவர் அறிமுகப்படுத்திய நடிகைகளில் பெயர் மாற்றப்படாதவர் வடிவுக்கரசி
விழாவில் வாழ்த்தியபோது வடிவுடன் இருந்ததால் பெயர் மாற்றப்படவில்லை என்றார் இயக்குனர் இமயம்
முதல் மரியாதையில் நடிகர் திலகத்தையே உலுக்கியவர்
தேவர் மகனில் ‘வாய்யா போய்யா’ என்று நடிகர் திலகத்தைச் சொல்லவே தான் ரொம்பவும் யோசித்ததாகவும்,வடிவுக்கரசி அவர்களோ முதல் மரியாதை படம் முழுவதுமே அவரை வறுத்து எடுத்ததாகவும்,அந்த விதத்தில் அவர் தன்னிலும் சிறந்த நடிகை என்றார் நடிகர் சங்கத் தலைவர் நாசர்
பட்டு வண்ண ரோசா ஞாபகத்துடன் முதல் மரியாதையைப் பார்த்து ஏமாந்து போனதாக வருத்தப்பட்டார் மன்சூர் - அவ்வளவு மாற்றமாம் நடிப்பிலும் உருவிலும்.
அருணாச்சலம் படத்தில் சூப்பர் ஸ்டாரின் பாட்டியாகப் பிரமோஷன்.
நடன நடிகை சங்கீதவோ, தான் சிறிய பெண் என்பதையும் மறந்து தன் நாட்டியத்தைப் பெருந்தன்மையுடன் புகழ்ந்த பரந்த மனம் கொண்டவர் வடிவுக்கரசி என்றார்.
நடிகை தேவயானி தன் இன்ஸ்பிரஷனே அவர் என்றார்.
அமரர் விஜயகாந்த் அவரின் புகழுக்குப் புகழ் சேர்த்தார். இறந்தும் பேசுபவர்களும், பேசப்படுபவர்களும் உயர்ந்தவர்களல்லவா?
திருமதி விஜயகாந்த் பழமையை நினைவு கூர்ந்து பாராட்டினார்.
டி.ஆர், தனக்கே உரித்தான அடுக்கு மொழி பாணியில் அசத்தினார்.
விஜய் சேதுபதியோ, அம்மாவின் அனுபவ வயது 45 தான் தன் வயது என்றும் இருவரும் ஒரே வயதினர்தான் என்றும் புகழ்ந்தார்.
உலக நாயகன் ஒளி வெள்ளத்தில் வந்து பாராட்டினார்.
மனிதச் சொத்தே தான் சம்பாதித்த அனைத்திலும் உயர்வானது என்றார் விழா நாயகி வடிவுக்கரசி.
கல்கியும் நாமும் சேர்ந்தே வாழ்த்துவோம்.
வாழ்ந்திடுக வடிவுக்கரசி வையத்தில் வெகு நெடு நாள்!