ghilli re-release 
வெள்ளித்திரை

உலகமெங்கும் கில்லி திரைப்படம் ரீ-ரிலீஸ்! எப்போ தெரியுமா?

கண்மணி தங்கராஜ்

இயக்குனர் தரணி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘கில்லி’ திரைப்படம் வரும் 20ஆம் தேதி உலகம் முழுவதும் மறு வெளியீடு செய்யப்படுகிறது.

ரீ-ரிலீஸ் மோகம்:

கடந்த சில மாதங்களாகவே ரீ-ரிலீஸ் செய்யப்படும் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில்  கிடைக்கும் வரவேற்பு என்பது பெருகிக்கொண்டே தான் இருக்கிறது. கமலின் ஆளவந்தான், ரஜினிகாந்தின் முத்து போன்ற பழைய  ரீ-ரிலீஸ்  திரைபடங்கள் ரசிகர்களின்  நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து  3, வடசென்னை, வாரணம் ஆயிரம், மயக்கம் என்ன  போன்ற படங்கள் வெளியானது. இதன்மூலம்   ரீ ரிலீஸ் திரைப்படங்களுக்கான மோகமும் மக்கள் மத்தியில்   நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருந்து வருகிறது. அந்த வகையில் பிளாக்பஸ்டர் ஹிட்டான படங்களை ரீ-ரிலீஸ் செய்யும் பணிகள் தொடர்ந்து வரும் நிலையில் வருகிற ஏப்ரல் 11-ந் தேதி லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி, தமன்னா நடித்த பையா படம் ரீ-ரிலீஸ் ஆக உள்ளது. கடந்த 2010-ம் ஆண்டு வெளியான இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. மேலும்  அதன் 14 ஆண்டுகள் நிறைவை கொண்டாடும் வகையில் அன்றைய தினம் மீண்டும் ரிலீஸ் செய்ய உள்ளனர்.

கில்லி திரைபடம்:

தெலுங்கு சினிமாவில் நடிகர் மகேஷ் பாபு நடிப்பில் வெளியான ’ஒக்கடு’ படத்தின் ரீமேக் ஆக கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான படம் தான் ‘கில்லி’. இயக்குனர் தரணியின் இயக்கத்தில் நடிகர் விஜய் அவருக்கு ஜோடியாக நடிகை த்ரிஷா வில்லனாக பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்த இப்படம் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமாக மாறியது. மேலும் விஜய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ் ஆகியோருக்கு இப்படம் இவர்களது சினிமா பயணத்தின் ஒரு பெரிய திருப்புமுனையாக அமைந்தது. வித்யாசாகர் இசையில் இப்படத்தில் அமைந்த அனைத்து பாடல்களுமே ஹிட் ஆனது.

கில்லி ரீ-ரிலீஸ் தேதி அறிவிப்பு:

ரீ-ரிலீஸ் ட்ரெண்டானது அதிகரிக்க தொடங்கிய நாளில் இருந்தே ரசிகர்கள் அதிகளவில் விரும்பி கேட்ட படம் என்றால் அது கில்லி தான். இந்நிலையில், ரசிகர்களின் கோரிக்கைக்கு இணங்க கில்லி படத்தின் ரீ-ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளனர். அதன்படி  வருகிற ஏப்ரல் 20-ந் தேதி உலகமெங்கும் கில்லி திரைப்படம் பிரம்மாண்டமாக ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

வசூல் சாதனை படைக்குமா?

சாதரணமாக தொலைக்காட்சியிலேயே எத்தனை முறை பார்த்தாலும் சளைக்காத ஒருசில திரைபடங்களுள் இதுவும் ஒன்று. அதிகப்படியான ரசிகர்களின் கோரிக்கைகளுக்கு பிறகு வெளியாகும் கில்லி திரைப்படம் எந்த அளவிற்கு வசூல் சாதனை படைக்க உள்ளது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT