Vijay's car damaged 
வெள்ளித்திரை

விஜய்யை சூழ்ந்த கேரளா ரசிகர்கள்... சுக்குநூறாக நொறுங்கிய கார்!

விஜி

கேரளாவில், நடிகர் விஜய்யின் காரை சூழ்ந்த ரசிகர்களால் காரின் கண்ணாடி சேதமடைந்தன.

முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய்க்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களிலும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். அரசியலில் தாவிய நடிகர் விஜய் தற்போது அவரது 68வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு GOAT என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் அப்டேட்கள் அவ்வபோது வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தும். கோட் படத்தின் போஸ்டர்கள் வெளியானதன் மூலம், விஜய் இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்பது வைரலானது.

ஏ.ஜி.எஸ்.என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக், கடந்த புத்தாண்டை முன்னிட்டு வெளியாகி வைரலானது.

இந்த படத்தை தொடர்ந்து இன்னும் ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடிக்கவுள்ளதாகவும், அதன் பிறகு முழு வீச்சில் அரசியலில் செயல்படுவதாகவும் விஜய் ஏற்கனவே அறிவித்து விட்டார். இந்த நிலையில், கோட் படத்தின் ஷூட்டிங்கிற்காக நேற்று விஜய் கேரளாவிற்கு சென்றிருந்தார். கேரளாவில் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தமிழகத்தை போன்றே விஜய்யின் படம் ரிலீசான முதல் நாளே பேனர், போஸ்டர் எல்லாம் வைப்பார்கள்.

Vijay's car damaged

அப்படி, விஜய் திருவனந்தபுரம் விமான நிலையம் வந்த போது ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனர். அவர் விமான நிலையத்தைவிட்டு வெளியேற முடியாத அளவுக்கு ரசிகர்கள் கூடியதால், விஜய்யின் கார் ரசிகர்கள் மத்தியில் தத்தளித்தது. நெரிசலில் கார் கண்ணாடி உடைந்ததுடன், காரின் பல பகுதிகள் தள்ளுமுள்ளு காரணமாக சேதமடைந்தன. பிறகு ஒருவழியாக போலீசார் விஜய் காரை மீட்டு அவரை பத்திரமாக அனுப்பி வைத்தனர்.

திருவனந்தபுரம் விமான நிலையம் மற்றும் க்ரீன் பீல்டு விளையாட்டு மைதானம் ஆகிய இடங்களில் GOAT படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

90-களில் இந்திய சினிமாவில் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய நடிகை! யார் யாருக்கு எத்தனை கோடி?

மஞ்சமாதா என்கிற மாளிகைபுரத்து அம்மன் வரலாறு தெரியுமா?

30,000 டன்கள் பனித்துகளும், 500 டன்கள் பனிக்கட்டிகளும்... ஆயுட்காலம் மூன்று மாதங்கள் மட்டுமே! புரியலையா? படிச்சு பாருங்க தெரியும், புரியும்!

குளிர்கால சரும பராமரிப்பு - 5 பொருட்கள் போதுமே!

டென்னிஸ் உலகை ஆண்ட ரபேல் நடாலின் வெற்றிக் கதை!

SCROLL FOR NEXT