Maharaja movie 
வெள்ளித்திரை

இந்தியில் ரீமேக்காகும் மகாராஜா... குஷியில் படக்குழு!

விஜி

விஜய் சேதுபதி நடிப்பில் அண்மையில் ரிலீஸ் ஆகி ரூ.100 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்த மகாராஜா படம் விரைவில் இந்தியில் ரீமேக் ஆக உள்ளது.

தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகராக உலா வருபவர் விஜய் சேதுபதி. கதாநாயகன், வில்லன் என இரண்டு வேடங்களில் கலக்கி வருபவர். தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதியின் 50வது படம் மகாராஜா . இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் திரைப்படம் தான் மகாராஜா. விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்த 50-வது படம் என்பதால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்புகள் இருந்தது என்றே கூறலாம். படத்தில் நட்டி, முனிஷ்காந்த், அனுராக் காஷ்யப், பி.எல்.தேனப்பன், சிங்கம் புலி, பாரதிராஜா, உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இந்த படம் ஜூன் 14ஆம் தேதி வெளியான நிலையில், நல்ல வரவேற்பை பெற்றுது. உலக அளவில் ரூபாய் 107 கோடியை வசூல் செய்துள்ளது என அறிவித்து இருக்கின்றனர். தந்தை, மகள் குறித்த கதை என்பதாலும் இந்த படம் சிறப்பு கவனம் பெற்றுள்ளது. பெண் பிள்ளைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் ரீதியான வன்கொடுமையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்பதாலும் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது.

நடிகர் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்து ரூ.100 கோடி வசூலிக்கும் முதல் படம் இதுவாகும். தியேட்டரை தொடர்ந்து ஓடிடியில் அண்மையில் ரிலீஸ் ஆன மகாராஜா திரைப்படம் அதிலும் சக்கைப்போடு போட்டு வருகிறது. குறிப்பாக இந்தியில் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது.

இந்நிலையில், மகாராஜா படத்தை இந்தியில் ரீமேக் செய்ய வேலைகள் நடந்து வருகிறது. அப்படத்தின் இந்தி ரீமேக் உரிமையை நடிகர் அமீர் கான் கைப்பற்றி உள்ளார். அவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த லால் சிங் சத்தா திரைப்படம் படுதோல்வி அடைந்ததால், மகாராஜா ரீமேக்கில் நடித்து அமீர்கான் கம்பேக் கொடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் சமீப காலமாக தமிழில் இருந்து இந்தியில் ரீமேக் ஆகும் படங்கள் பெரியளவில் சோபிக்கவில்லை. இந்த சூழலில் மகாராஜா படத்தின் ரீமேக் உரிமையை அமீர் கான் வாங்கி இருப்பது ரிஸ்க் ஆன முடிவு என்றே பாலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

திப்பு சுல்தானை ஆங்கிலேயரிடமிருந்து காத்த திண்டுக்கல் மலைக்கோட்டை பெருமை தெரியுமா?

இவள் இருட்டில் மட்டுமே வருவாள்! 

புரதம் நிறைந்த சோயா கீமா செய்யலாம் வாங்க! 

மாதச் சம்பளம் வாங்குபவர்கள் செய்யும் 6 நிதித் தவறுகள்! 

ஆரஞ்சு Vs சாத்துக்குடி: எது சிறந்தது?

SCROLL FOR NEXT