வெள்ளித்திரை

'விஜயானந்த்' திரைப்பட சிங்கிள் ட்ராக் வீடியோ வெளியீடு!

எம்.கோதண்டபாணி

ர்நாடகத்தைச் சார்ந்த பிரபல தொழிலதிபர் விஜய் சங்கேஸ்வரின் வாழ்க்கை வரலாற்றை தழுவி தயாராகியிருக்கும் திரைப்படம், 'விஜயானந்த்.' இந்தப் படத்தில் இடம்பெறும், 'காளிதாசன் சாகுந்தலா…' எனும் முதல் பாடலுக்கான வீடியோ வெளியீட்டுக் காட்சி பெங்களூரில் உள்ள பிரபலமான ஓரியன் மால் எனப்படும் வணிக வளாகத்தில் நடைபெற்றது. இந்தப் பாடல் வெளியிட்டு விழாவில் கன்னட திரையுலகைச் சேர்ந்த முன்னணிப் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 'ட்ரங்க்' எனும் ஹாரர் திரில்லர் படத்தை இயக்கிய ரிஷிகா சர்மா இந்தப் படத்தை இயக்கி இருக்கிறார். 'ட்ரங்க்' படப் புகழ் நடிகர் நிஹால் கதாநாயகனாக இதில் நடித்திருக்கிறார்.

''1976ஆம் ஆண்டில் ஒரே ஒரு வாகனத்துடன் சரக்கு போக்குவரத்து துறையில் கால் பதித்த விஜய் சங்கேஸ்வர், இன்று இந்தியா முழுவதும் அறியப்படும் வி.ஆர்‌.எல். எனும் மிகப்பெரிய சரக்கு போக்குவரத்து நிறுவனத்தின் உரிமையாளராக உயர்ந்திருக்கிறார். இவரது வெற்றிப் பயணத்தின் பின்னணியிலுள்ள அவரது கடுமையான உழைப்பையும், அவர் சந்தித்த சவால்களையும் கதைக்களமாகக் கொண்டு இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறோம். அவரது மகன் டாக்டர் ஆனந்த் சங்கேஸ்வருடன், விஜய் சங்கேஸ்வரின் பயணம் எப்படி வெற்றிகரமாக அமைந்தது என்பதையும் இந்தப் படத்தில் விவரித்திருக்கிறோம். கன்னடத்தில் தயாராகி, முதன் முதலாக தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய இந்திய மொழிகளில் மொழி மாற்றம் செய்து வெளியாகும் முதல் சுயசரிதை திரைப்படம் என்ற கௌரவத்தையும் இந்தப் படம் பெற்றிருக்கிறது” என்கிறார் பட இயக்குநர் ரிஷிகா சர்மா.

இந்தப் படத்தில் ஆனந்த் நாக், பாரத் பொப்பன்னா, ஸ்ரீ பிரகலாத், நடிகை வினயா பிரசாத், பிரகாஷ் பெலவாடி, வி. ரவிச்சந்திரன், அனீஷ் குருவில்லா, ரமேஷ் பட், தயாள் பத்மநாபன், ஷைனி ஷெட்டி உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். கீர்த்தன் பூஜாரி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்துக்கு கோபி சுந்தர் இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தின் தமிழ் பதிப்பு வசனத்தையும், பாடல்களையும் பாடலாசிரியர் மதுரகவி எழுதியிருக்கிறார். 'ஸ்கெட்ச்' படப் புகழ் ரவி வர்மா சண்டை காட்சிகளை அமைத்திருக்கிறார்.

சுயசரிதை படைப்பாக தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை வி.ஆர்.எல். பிலிம் புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் டாக்டர் ஆனந்த் சங்கேஸ்வர் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து, இறுதி கட்ட வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் காட்சிகள் மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு, பெரும் வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

காற்றால் இயங்கும் லிஃப்ட்டுகள் அழகுக்கு அழகு, ஆற்றலுக்கு ஆற்றல்!

சாப்பிடுவதற்கும் சில விதிமுறைகள் உண்டு தெரியுமா?

சம்மருக்கு சுவையான சிம்பிள் மில்க் ரெசிபிஸ் இதோ...

A - Z நகை பாதுகாப்பு...!

சுயபுத்தி போனாலும், சொல்புத்தி வேண்டும்!

SCROLL FOR NEXT