வெள்ளித்திரை

நாங்கள் இப்போது "கல்கி"யின் பெற்றோர்- நடிகை அபிராமி!

கார்த்திகா வாசுதேவன்

அன்னையர் தினத்தை முன்னிட்டு நடிகை அபிராமி பெண் குழந்தையை தத்தெடுத்த மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துள்ளார். அபிராமியும் அவரது கணவர் ராகுலும் கடந்த ஆண்டு ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்தனர், தத்தெடுத்திருக்கும் அந்தச் சின்ன மலருக்கு அவர்கள் 'கல்கி' என்று பெயரிட்டுள்ளனர்.

தன் மகளுக்கு ஒரு புதிய அம்மாவாக அன்னையர் தினத்தை கொண்டாடுவதில் மகிழ்ச்சியடைந்த அபிராமி, தங்களது பெண் குழந்தையுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மே- 14 ஞாயிற்றுக்கிழமை அன்று சமூக ஊடகங்கள் மூலம் ‘ஞாங்கங்கள் சந்துஷ்டாரானு’ எனத் தலைப்பிட்டு நடிகை இந்த நல்ல செய்தியை அறிவித்துள்ளார்.

அவர் தனது இன்ஸ்டாகிராம் குறிப்பில், “அன்புள்ள நண்பர்களே, ராகுலும் நானும் இப்போது கல்கி என்ற பெண் குழந்தைக்கு பெற்றோர் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்! கடந்த ஆண்டு நாங்கள் எங்கள் மகளை தத்தெடுத்தோம், அந்த நிகழ்வு எல்லா வகையிலும் எங்கள் வாழ்க்கையை மாற்றிவிட்டது. இன்று நான் ஒரு புதிய தாயாக அன்னையர் தினத்தை கொண்டாடும் பாக்கியத்தைப் பெற்றுள்ளேன்! நாங்கள் எங்கள் புதிய பாத்திரத்தை சிறப்பாகச் செய்ய உங்கள் ஆசீர்வாதங்களை நானும் எனது குடும்பத்தினரும் கேட்டுக்கொள்கிறோம்!

- என்று குறிப்பிட்டிருந்த அபிராமி அனைத்துத் தாய்மார்களுக்கும் இந்த சிறப்பு விழாவில் தனது வாழ்த்துக்களை தெரிவிக்கவும் மறக்கவில்லை.

“உங்கள் அனைவருக்கும் அருமையான அன்னையர் தின வாழ்த்துக்கள்!! #அன்னையர் தினம் #புதிய அம்மா," என்று அவர் தனது வாழ்த்துக்களையும், நல்ல செய்தியையும் பகிர்ந்திரருந்தார்.

அபிராமியின் மேற்கண்ட இடுகையானது அவரது ரசிகர்கள் மற்றும் நலன் விரும்பிகள், மற்றுமுள்ள அவரது தொழில்துறையை சார்ந்த நண்பர்களின் கருத்துகளால் நிரம்பி வழிகிறது.

அன்னையர் தினத்தில் அபிராபியின் இந்த நன்முயற்சியை கொண்டாடி அனைவரும் தங்களது பாராட்டுகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

30,000 டன்கள் பனித்துகளும், 500 டன்கள் பனிக்கட்டிகளும்... ஆயுட்காலம் மூன்று மாதங்கள் மட்டுமே! புரியலையா? படிச்சு பாருங்க தெரியும், புரியும்!

குளிர்கால சரும பராமரிப்பு - 5 பொருட்கள் போதுமே!

டென்னிஸ் உலகை ஆண்ட ரபேல் நடாலின் வெற்றிக் கதை!

செல்லப்பிராணி வளர்ப்பு முறையும் மழைக்கால பராமரிப்பு மற்றும் நன்மைகள்!

Book Review - The Thirteenth Child - by Erin A. Craig (2024)

SCROLL FOR NEXT